பெண்களுக்கு
எதிரான
பெருங்கொடுமை
பெருகிக் கொண்டே
போவது...
மனித
சமூகத்துக்குப்
பெருமையா?
துக்கப்படுவோம்!
வெட்கப்படுவோம்!
ஜெயஸ்ரீயின்
அழுத குரல் கேட்டு
எழுத மனம்
வரவில்லை !
மனம்
பதைக்கிறது!
கொதிக்கிறது!
சினம்
தலைக்கேறுகிறது !
அந்த அபயக்
குரல்கேட்டு
ஈர இதயங்களில்
இரத்தம்
கசிகிறது!
நம் சித்தம்
நசிகிறது!
பெண்களுக்கான
உரிமைப்
போராட்டம்
ஒருபுறம் !
ஆணாதிக்க
வெறியாட்டம்
மறுபுறம் !
நமக்கெல்லாம்
ஒரு சந்தேகம்
எழுகிறது!!
நாமெல்லாம்
மனிதர்கள்தானா?
மனித
சமூகத்தில் தான்
வாழ்கிறோமா?
மனிதன் என்று
சொல்லுகிற தகுதி
நமக்கு உண்டா?
நம்மையே நாம்
கேட்க வேண்டிய
கேள்விகள் இவை !
மனிதன்
அறிவில்
சிறந்தவன்!
உயர்ந்தவன்! என
சொல்வதற்கு நாம்
வெட்கப்படவேண்டும்!
தன்
இனத்தை
அழித்து வாழும்
இனம் உலகில்
ஏதும் உண்டா ?
சிங்கமும், புலியும்
தன் இனத்தை
வேட்டையாடிப்
பணம், பதவி
மோகம் உண்டா?
சூத்திர பஞ்சம
இழிவு உண்டா?
உயர்ந்தோர்,
தாழ்ந்தோர்
என்கிற
பாகுபாடு
உண்டா?
ஏழை,
பணக்காரன்
என்கிற
ஏற்றத்தாழ்வு
உண்டா?
எத்தனை
எத்தனை
வேற்றுமை !
எல்லா
வேற்றுமையும்
மனிதனிடம்
மட்டுமே உண்டு!
இப்போது
சொல்லுங்கள்!
மனிதன்
உயர்ந்தவனா?
விலங்குகள்
உயர்ந்தனவா?
இளம்பிஞ்சு
கடைசி
நேரத்தில் கூட
அப்பா! அப்பா! என
அழுது
அடங்கினாளே!
ஆண்களுக்கு
அது
வலிக்கவில்லையா?
மனம்
துடிக்கவில்லையா?
பெண்
உயிரைத்
தன் உயிராக
கருதாத,
ஆண்கள்
சமூகம்
அழியட்டும்!
பெண்ணின்
பெருமை
உலகிற்குத்
தெரியட்டும்!!
உலகம்
மீண்டும்
துவங்கட்டும்!!
-சிற்பி சேகர்
பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment