தளபதி ஸ்டாலின் அவர்களை யாருன்னு ‘தினமலர்' அடையாளம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. இதன்மூலம் ‘தினமலர்' யாருன்னு நம் மக்கள் அடையாளம் புரிந்துகொண்டால் சரி! கரோனா நேரத்தில் டாஸ்மாக்கை திறப்பதை எதிர்த்து, அனைத்துக் கட்சிகளும் நடத்திய எதிர்ப்புணர்வைக் கொச்சைப்படுத்தும் கொச்சைப் புத்திதானே இது! இதன்மூலம் என்ன சொல்ல வருகிறது ‘தினமலர்?' நீங்கள் என்ன கரடியா கத்தினாலும், ‘குடி'மக்களை உங்களால் என்ன செய்ய முடியும்? என்கிற ஏகடியம்தானே இது? அப்படிப் பார்த்தால், இராமனே குடிகாரன் என்று வால்மீகி இராமாயணத்தில் ஆதாரம் இருக்கே!
சுரா பானம் குடித்தவன் சுரன் (ஆரியர்கள்), குடிக்க மறுத்தவன் அசுரன் (திராவிடன் அதாவது எதிர்ப்பதம்).
இப்பொழுது புரிகிறதா, யார் குடிகாரர்கள் என்று!
இந்திரன் பற்றி ‘ரிக்' வேதம் என்ன கூறுகிறது?
‘‘வீரனான சோமக் குடியன்' வேள்வி செய்யாத தெய்வத்தை வணங்காத - அந்தத் தாசர்களின் (திராவிடர்களின்) செல்வத்தை வழிப்போக்கர்களிடமிருந்து பறிக்கும் திருடனைப்போல் பறித்து, தெய்வ நம்பிக்கையுள்ள வேள்வியை விரும்பும் ஆரியர்களிடம் செலுத்துகிறான். (ரிக் வேதம், 1133).
ஆரிய ‘தினமலர்'களே, போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
No comments:
Post a Comment