திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமரியாதையாக நடத்திய தலைமைச்  செயலாளர்  மன்னிப்புக் கேட்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமரியாதையாக நடத்திய தலைமைச்  செயலாளர்  மன்னிப்புக் கேட்கவேண்டும்

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர்  டி.ஆர்.பாலு


சென்னை, மே 14 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தலைமைச் செய லாளர் அவமதித்து விட்டதாக அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு குற்றம் சாட்டி யுள்ளார்.


இதுதொடர்பாக நேற்று (13.5.2020) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்கள் அளித்த கோரிக்கைகளை அளிக்க தலைமைச்  செயலகத்தில் இன்று (மே 13) தலைமைச் செயலாளரை நானும், திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் களான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சந்தித் தோம். நானும், தயாநிதி மாறனும் முன்னாள் மத்திய அமைச்சர்கள். ஆனாலும், அதிர்ச்சியூட்டும் வகை யில் எங்களை மரியாதைக் குறைவாக நடத்தினார்.


இதற்காகதலைமைச் செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை யெனில் இப்பிரச்சினையை நாடாளு மன்ற உரிமைக் குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment