செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை பெருநகரில் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், முகக்கவசம் அணியாமல் சென்றால், ரூ.500 அபராதம்; முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்.


* தமிழ்நாட்டில் நேற்று 16 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம்.


* மகாராட்டிரத்தில் 80 விழுக்காடு தனியார் மருத்துவமனை படுக்கைகள் அரசு வசமானது.


* பாகிஸ்தானில் நூறு பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கி இருவர் தவிர மற்றவர் பலி.


* வீடு, வாகனக் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.


* தமிழ்நாட்டில் பத்திரிகைகள்மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


* ருசியாவிடமிருந்து ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளதால், பொருளாதாரத் தடையை இந்தியா சந்திக்கவேண்டும் என்று அமெரிக்க மிரட்டியுள்ளது.


* சொந்த ஊர் திரும்பவேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வடசென்னை திருவொற்றியூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.


* இலங்கையில் நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் கரோனா பரவல் காரணமாக ஜூன் 20 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


* ஆந்திராவிலும், புதுச்சேரியிலும் பேருந்துகள் இயங்கின.


* கரோனா இல்லாத மாவட்டமாகியது தருமபுரி..


* ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு நிதி உதவி ரூ.1000 கோடி.


* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை அரசு உடைமையாக தமிழ்நாடு அரசு அவசர சட்டம்.


* சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட இன்றுமுதல் அனுமதி.


* ஒரே வீட்டில் கூடிப் பேசிய 10 இந்தியர்கள்மீது வழக்கு - இது சிங்கப்பூரில்!


No comments:

Post a Comment