சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில்  எடுக்கப்பட்ட முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில்  எடுக்கப்பட்ட முடிவுகள்


புதுடில்லி, மே23 அகில இந்திய காங் கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று (22.5.2020) காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கள் பங்கேற்ற கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


22 கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்ற இக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


ஏற்கெனவே கரோனாவை சந் திக்கும் நிலையில், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ‘உம் பன்’ புயல், இரட்டை பேரிடியாக அமைந்துள்ளது. அந்த புயலை தேசிய பேரழிவாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.


மீட்பு, நிவாரண பணிகளுக்கு முன் னுரிமை அளிக்க வேண்டும். 2 மாநி லங்களுக்கும் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சோனியா காந்தி


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:-


கரோனாவுக்கு எதிரான போர், 21 நாட்களில் முடிந்து விடும் என்று ஆரம்பத்தில் பிரதமர் மோடி நம் பிக்கையுடன் இருந்தார். ஆனால் அது தவறாகிப் போய்விட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை கரோனா இருக் கும் என்றே தோன்றுகிறது.


கரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லாத மத்திய அரசு, இப்போது திணறுகிறது. ஊரடங்கு விதிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசிடம் தெளிவில்லை. ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வியூக மும் இல்லை. பரிசோதனை வழி முறைகள், கருவிகள் இறக்குமதி ஆகிய வற்றிலும் தடுமாறுகிறது. அதே நேரத் தில், கரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது.


கரோனா தாக்குதலின் அடையாள மாக, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு, பணம், மருந்து ஆகியவை இல்லாமல் சாலை களில் நடந்து சென்று கொண்டிருக் கிறார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.


நிலமற்ற வேளாண் தொழிலாளர் கள், கடைக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஆட்குறைப்பு செய்யப் பட்ட தொழிலாளர்கள் என 13 கோடி பேரின் நிலைமையையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது.


புகழ்பெற்ற பொருளாதார நிபு ணர்கள் பலர், உடனடியாக ஊக்கச் சலுகை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களும், அதுதொடர் பான மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புகளும் இந்த நாட்டின் மீதான குரூர நகைச்சுவையாக மாறிவிட்டன.


மக்களின் வங்கிக்கணக்கில் நேரடி யாக பணம் செலுத்துமாறும், இலவச உணவு தானியங்களை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குமாறும் நாங்கள் வலியுறுத்தினோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு கூறினோம். ஆனால் எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் ஆகிவிட்டது.


மக்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சிக்கிறது. இதுபற்றி யாரிடமும் ஆலோசனையோ, நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான முடிவை நாங்கள் கண்டிக்கிறோம்.


பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, எதிர்மறை யாக, அதாவது மைனஸ் 5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளனர். எனவே, இதன் விளைவுகள் பேரழிவாக இருக்கும்.


இந்த அரசிடம் எந்த தீர்வும் இல்லை என்பது கவலை அளித்தாலும், ஏழைகள் மீது இரக்கம் காட்டாதது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது.


முக.ஸ்டாலின் உரை



அப்போது திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-


நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம். நெருக்கடிகள் மிகுந்த காலக்கட்டங்களில் கூட, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைப் புறக்கணித்துவிடக்கூடாது. அனைத்து மாநிலங்களையும் சேர்த்து கூட்டு நடவடிக்கைக் குழு ஆரம்பத்திலேயே துவக்கப்பட்டிருக்க வேண்டும்.


கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநில அரசுகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், இன்னமும் மாநில அரசுகளுக்குத் தரப்பட வேண்டிய ஜி.எஸ். டி. பங்கை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.


இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், உதவிகளும் வழங்குவது; சரியான கேள்விகளைக் கேட்டு அரசைப் பொறுப்புக்குள்ளாக்குவது என எதிர்க்கட்சித் தலைவர்களாக நமக்கு இரு முக்கிய பணிகள் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தி.மு.க.வும், நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்.


‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு முன்னதாக ‘ஹெல்ப் லைன்’ ஒன்றினை ஏற்படுத்தினோம். முறைப்படி செயல்பட வேண்டிய அரசு செயல்படாத காரணத்தால், நிவாரண உதவியை நாங்கள் செய்யும்போது, இதை எங்கள் கடமையாகவே கருதிச் செய்கிறோம். மக்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக ஒரு கூட்டுத் தீர்மானத்தை வடித்தெடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். எனவே, அரசு செய்ய வேண்டியவை குறித்து சில கோரிக்கைகளை முன்மொழியக் கடமைப்பட்டுள்ளேன்.


கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான யுக்திகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். இடைக்கால முடிவெடுக்கும் முறையானது நிச்சயம் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக, வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் நேரடியாகப் பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க.வும், காங்கிரசும் வலியுறுத்தியபடி, தேவையில் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கப்பட வேண்டும்.


ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாள்களை 150 ஆக உயர்த்த வேண்டும். கடந்த காலங்களில், தலைவர் கலைஞரும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்தபடி, விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும். இந்த கரோனா தொற்று பிரச்சினையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தைக் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது. ஆனால், இதை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொடூரத்தை உண்மையிலேயே வென்று விடலாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.


இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment