ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • இந்திய சீன எல்லைப் பிரச்சினைக் குறித்து சீன நாட்டின் நடவடிக்கைகள் தனக்கு கவலை அளிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி தன்னிடம் கூறினார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனை இந்திய அரசு மறுத்துள்ளது.

  • இந்த ஜோஸ்யர்களும் கார்ப்பரேட் சாமியார்களும் எங்கே போயுள்ளார்கள்? ஒருவர் கூட, கரோனோ தொற்று தாக்கும் என முன்கூட்டியே சொல்லவில்லையே? இதற்கு மந்திரத் தீர்வு எதையும் இதுவரை சொல்லவில்லையே? என ஷோபா தே தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 2019-20இல் 4.2 சதவீதம். இது 11 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையைவிட கீழே சென்றுள்ளது. தற்போதைய காலாண்டில் 3.1% சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது என தேசிய புள்ளிவிவர அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை பதிப்பு:



  • ஒரே நாடு என்பதுதான் சிறந்த நாட்டிற்கான உத்தரவாதமாக இருக்கும் என நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, பாஜகவின் ஆட்சித்திறனைக் காட்டுகிறது என காங்கிரஸ் சாடியுள்ளது.

  • நாட்டில் இன்னமும் 17 கோடி ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மாதாந்திர கூடுதல் அரிசி, கோதுமை, தானியங்கள் கிடைக்கவில்லை என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

  • உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கைப்பாவையாக திகழ்கிறது என மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதற்கு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றம் இதனைக் கவனிக்க வேண்டும் என தலையங்க செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தி இந்து, சென்னை பதிப்பு:



  • டில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள டில்லி உயர்நீதி மன்றம், பாமர மக்களின் சிகிச்சைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உதவவில்லை; டில்லி அரசும் எய்ம்ஸ்-ம் தகவல் பரிமாற்றம் இல்லை என்று சாடியுள்ளது.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:



  • விரைவில் அறிவிக்கப்பட உள்ள மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்திய பண்டைய கலாச்சாரத்தை எதிரொலிக்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா,


30.5.2020


No comments:

Post a Comment