* தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நேற்று மேற்கொண்டனர்; பேச்சுவார்த்தையின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
* தமிழ்நாட்டில் 19 தொழிற்பேட்டைகளில் 421 தொழிற்சாலைகள் இயக்கப்பட்டன.
* தெலுங்குப் பாடகர் தியாகராஜர் ‘உஞ்ச விருத்தி' செய்து வாழ்ந்தார் என்பதை எல்லோருக்கும் புரியும்படி பிச்சை எடுத்து வாழ்ந்தார் என்று கமல்ஹாசன் சொன்னதற்காக அவர்மீது வழக்காம்.
* நேற்று ஒரேநாளில் மட்டும் மது விற்பனை ரூ.170 கோடியாம்.
* ஊரடங்கு முடிந்த பிறகு 50 விழுக்காடு பயணிகளுடன் தமிழக அரசுப் பேருந்துகள் இயங்கும்.
* மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதலமைச்சரைச் சந்திப்பதற்காக - கேளம்பாக்கம் அடுத்த படூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் 5 ஆம் வகுப்புப் படிக்கும் மகன் மற்றும் நான்கு சிறுவர்கள் புறப்பட்டபோது, காவல்துறை தடுத்து நிறுத்தியது.
* அம்மா உணவகங்களில் இனி பார்சல் மட்டும்தானாம்!
* கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இரும்பிலி கிராமத்தில் இரு டாஸ்மாக் கடைகளுக்குத் தீ வைப்பு!
* அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயுர்வுக்கு சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு.
* ஊரடங்குக் காரணமாக இந்தியா, சீனா மற்றும் பல நாடுகளில் அடுத்து ஒன்பது மாதங்களில் குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும் என்று அய்.நா. கணித்துள்ளது. உலகளவில் 11.6 கோடி குழந்தைகளும், இந்தியாவில் 2.01 கோடி குழந்தைகளும் பிறக்குமாம்.
No comments:
Post a Comment