எந்த நாமம் போடுவது?
“எண்ணங்கள் சில” என்ற தலைப்பில் ஜெயலலிதாவை விட்டு தொடர் கட்டுரை எழுத வைத்தார் (சோ). இது நடிகை ஜெயலலிதா எழுதுவதுதானா என்று பலருக்கும் சந்தேகம் வர, ஆம் அவரேதான் என்று ஓர் இதழில் அதை உறுதியும் செய்தார். சந்தேகம் வந்ததற்குக் காரணம், அந்தத் தொடர்- சினிமா பற்றியது அல்ல, சமூகச் செய்திகள் பற்றியது. நடிகை ஜெயலலிதாவில் ஒரு சமூக ஆர்வலரைக் கண்டறிய சோவால் முடிந்தது யோசிக்க வேண்டிய விஷயமே.
அவர் எத்தகைய விஷயங்களை எழுதி வந்தார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் (15-7-80 இதழில்) - “கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் ஒரு இடைக்காலத் தீர்ப்பு அளித்தது. அதன்படி இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் (காஞ்சிபுரம்) தேவராஜசுவாமி கோயில் ஊர்வலங்கள் எல்லாவற்றிலும் இரண்டு யானைகள் அருகருகே வடகலை, தென்கலை நாமம் இடப்பட்டுச் செல்ல வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.. என் தகப்பனார் வடகலை ஐயங்கார், என் தாயார் தென்கலை ஐயங்கார், இது உண்மை. நாளை நான் நாமம் போட்டுக் கொள்ள விரும்பினால் எந்த நாமம் போட்டுக் கொள்வது?”
(காலந்தோறும் பிராமணியம் - பாகம் 7; பக்கம் 220)
No comments:
Post a Comment