தினசரி 30-க்கும் மேற்பட்டோர் சாலைகளில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது விபத்திலும், பசி மற்றும் வெயில் கொடுமையிலும் உயிரிழந்துவரும் நிலையில் மோடி அரசு புதிய தனது 6ஆண்டு சாதனை காணொலியை வெளியிட்டு கொண்டாடி வருகிறது.
மோடி 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தார். மே 18-ஆம் தேதியோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கரோனா நோய் தொற்று ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. நாட்டின் பெருநகரங்கள் அனைத்துமே கடுமை யான நோய் பாதிப்பிற்குள்ளான நகரங்களாக அறிவிக்கப் பட்டு ஊரடங்கு மேலும் இரண்டுவாரம் நீடிக்கப்பட்டுள்ளது,
அதே போல் மரணமடைபவர்களின் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்ததைப்போன்றே இந்தியாவிலும் அதிகரிக்கத்துவங்கியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநில எல்லை நகரமான சத்னாவிற்கு அருகில் ரயில் பாதையில் அவுரங்காபாத்திலிருந்து நடந்துவந்து களைத்து உறங்கிக்கொண்டு இருந்த நபர்கள் மீது ரயில் ஏறியது. 3 வயது 8 வயது குழந்தைகள் உட்பட 17 பேர் மரணமடைந்தனர். அதே போல் உத்தரப் பிரதேச மாநில ஒரையாவில் இரண்டு சரக்கு வாகனங்கள் மோதிக் கொண்டதில் 26 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். 17 பேர் பலத்த காயத்துடன் போராடிக்கொண்டு இருக் கின்றனர். இறந்தவர்களின் பிணங்கள் உடற் பரிசோத னைக்குப் பிறகு எவ்வித மரியாதையும் இல்லாமல் லாரிகளில் புலம்பெயர் தொழிலாளர்களுடனே அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக் கின்றன.
இப்படி ஒரு கொடூரமான சூழல் இருக்கும் போது மோடி அரசின் 6 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்த ஒரு காணொலிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காணொலிக் காட்சியில், பலன்தராத ஸ்வாச் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற பழைய திட்டங்கள் தொடர்பான அம்சங்கள்தான் இடம்பெற்றுள் ளனவே தவிர, கரோனா பரவல் நெருக்கடியை மோடி அரசு கையாண்டது என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து தொடர்பாக மோடி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்கள் சம்பிரதாய இரங்கல் தெரிவித்திருந்தனர். மொத்தம் 9 நிமிடங்கள் கொண்ட இந்த காணொலிப் பதிவு, அந்தக் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், மோடி வெற்றிபெற்றபோது, அவர் கூட்டத்தைப் பார்த்து கையசைக்கும் ஒரு படமும் இடம் பெற்றுள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை 300 விழுக்காடு உயர்வு, இரயில் கட்டணம் உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, மருந்துப் பொருள்கள் விலை உயர்வு, வங்கிகளில் வாராக்கடன் அதிகரிப்பு, வெளிநாட்டில் கருப்புப் பணத்தை முடக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பு. ரூபாய் மதிப்பிழப்பால் பொருளாதாரச் சீரழிவு, சிறு-குறு தொழில்கள் நாசம், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரி கோலம், மாநிலங்களின் உரிமைகள் பாதிப்பு.
கங்கை சுத்திகரிப்பு என்ற பெயரால் 20 ஆயிரம் கோடி ரூபாய் வீண் செலவு (ஆனாலும், பிள்ளை பிழைத்த பாடில்லை) - உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு, குருகுலக் கல்வி, இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, சமூக சீர்திருத்த வாதிகள் படுகொலைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தல், மாட்டுக்கறித் தடை, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரிப்பு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த 'நீட்', ஜி.எஸ்.டி., ஆதார் கார்டு திட்டங்களை ஆளும் கட்சியான நிலையில் செயல்படுத்துல்.
எடுத்துக்காட்டுக்கு சில இவை:
இதுதான் நரேந்திர மோடி தலைமையிலான ஆறு ஆண்டு ஆட்சியின் சாதனை. கரோனாவால் கழுத்து அறுபட்ட கோழிபோல மக்கள் துடிதுடித்துக் கொண்டி ருக்க இந்தக் கால கட்டத்தில் ஆறு ஆண்டு கால சாதனை வீடியோ விளம்பரம் என்பது அசல் சிறுபிள்ளைத்தனமே!
கரோனாவுக்கு முன்னதாகவே இந்தியாவிலும் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. கரோனாவின் வீச்சுக்குப் பிறகு கேட்கவே வேண்டாம்?
எந்தத் தைரியத்தில் ஆறு ஆண்டு ஆட்சி சாதனைகள் என்ற விளம்பரக் கேலிக்கூத்து என்னும் மேளத்தைத் தட்டுகிறது மோடி ஆட்சி?
No comments:
Post a Comment