சென்னை, மே 16- கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை களின் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு கடந்த மார்ச் 30 அன்று தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் மே 11 அன்று இரண்டாவது முறை யாக ரூ. 5.10 கோடியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இது வரை சக்தி மசாலா நிறுவனம் மொத்தம் ரூ. 10.10 கோடியை நிவாரண நிதியாக வழங்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment