சென்னை,மே16- ஜூன் 1 முதல் நடைபெற வுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளி லேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும். அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க, நடு நிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத் திற்கு 21.05.2020-ற்குள் வந்து இருக்க வேண்டும்.
அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை 11 மணிக்குள் தெரிவிக் கப்பட வேண்டும். 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட் டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் அடங் கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை தெரிவிப்பதோடு, அவர்களுக்கு tஸீ மீ-ஜீணீss ஆன்லைன் வழியாக உடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரத் தையும் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண் டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment