2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதியை பாதியில் நிறுத்துவதா?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, மே 10 கரோனா தொற்றைக் காரணம் காட்டி, 2019--2020- ஆம் ஆண்டுக்கான எம்.பி.க்களின் தொகுதி நிதியை நிறுத்துவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
கடும் கண்டனத்திற்குரியது
நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு (2020---2021 மற்றும் 2021---2022) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்துவிட்டு, இப்போது 2019---2020- ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கிவிட்ட நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக் காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத் ததைப் பாதியில் பறிப்பதும் பண் பாடாகாது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதா ரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து, மூன்றாண்டுத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல், மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலுமாகும்.
கரோனா பணிகளில்
மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ?
உச்சநீதிமன்றமே அங்கீகரித் துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது, கரோனா பணிகளில் மத்திய அர சுக்கே போதுமான ஆர்வம் இல் லையோ? என்ற அய்யப்பாட்டினை எழுப்புவதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு நடந்து கொள்வது மக்களாட்சித் தத் துவத்திற்கும், நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கும் மாறானது.
மத்திய அரசு
திரும்பப் பெறவேண்டும்
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப் பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனை யுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே 2019---2020-ஆம் ஆண்டிற் கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி, மக்களுக்குத் துரோகம் இழைத்திடும் ‘சுற்றறிக்கை’யை மட்டுமின்றி, ஏற் கெனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தர வையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment