- குடந்தை கருணா
ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா மாவட் டத்தில் ஒரு சிறிய கிராமம் சிர்தியாஸ். அக் கிரா மத்தில், 13 வயதுச் சிறுவன், பன்வார் மேக்வான்சி. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஷாகா’ பயிற்சியில் கலந்து கொள்கிறான். ஒடுக்கப்பட்ட, தாழ்ந்த சாதி என பிறரால் கருதப்படும் சமூகத்தில் பிறந்த அந்த தலித் சிறுவனுக்கு, இந்தப் பயிற்சி பள்ளியில் சமூகத்தில் இருந்த வேறுபாடு எதுவும் இல்லாமல் நடத்தப்பட்ட விதம், பெருமை அளிப்பதாக இருந்தது. அந்தப் பயிற்சியில் தீவிரமாக கலந்துக் கொண்டு குறுகிய காலத்தில் அதனை வழி நடத்தும் பயிற்சியாளராக உயர்வு பெறுகிறான். தன்னைப் போலவே, பல பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இப்பயிற்சிப்பள்ளிகளில் ஆர் வத்துடன் கலந்து கொள்வதையும் இச்சிறுவன் கவனம் கொள்கிறான்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தனது பகுதியில் இருந்து செல்லும் கரசேவகர்கள் பட்டியிலில் இடமும் பெறுகிறான். ரயிலில் ஏனைய கரசேவகர்களோடு தனது வாழ்நாள் இலட்சியத்தை அடைந்த மகிழ்வோடு அமர்ந் திருக்கிறான். ரயில் புறப்படுகிறது. தன்னோடு வருவார்கள் என்று எண்ணிய பல தலைவர்கள் ஒவ்வொருவராக ரயிலில் இருந்து இறங்கினார்கள். சிறுவனுக்கு திகைப்பு. தனது அருகில் இருந்த சிலரிடம் கேட்டபோது, அதற்குத் தெளிவான பதிலும் இல்லை. பின்னாளில்தான் மேக்வான்சிக்கு விடை கிடைத்தது.
முஸ்லீம் மீது வெறுப்பு; அனைத்துக்கும் அவர்களே காரணம் என்பது பாலபாடமாக ’ஷாகா’வில் பயிற்றுவிக்கப்பட்டது. தனது கிராமப் பகுதியில் ஒரு முஸ்லீம்கூட இல்லாத நிலையில் அவர்கள் பற்றி எந்த புரிதலும் இல்லாமலே அவர் கள் மீது ஒரு வெறுப்பை அச்சிறுவன் மனதில் பதிய வைத்துக் கொள்கிறான். அதே போன்று, சமஸ் கிருத மொழிதான் அனைத்திற்கும் மேலானது. அது கடவுளின் மொழி எனக் கற்பிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் கொல்லப்படுகிறான். முஸ்லீம்களால்தான் கொல்லப்பட்டான் என பஜ்ரங்தள் அமைப்பினரால் சொல்லப்பட்டது. அந்த இளைஞனின் உடலின் சாம்பல் ஊர்வலமாக மேக்வான்சி வசிக்கும் கிராமம் வழியே செல்ல இருப்பதை அறிந்து, அதில் கலந்து கொள்ளும் தலைவர்கள் அனைவரும் தனது இல்லத்தில் உணவு அருந்திட வேண்டுகோள் விடுக்கிறான். தலைவர்கள் அதனை ஏற்றுக் கொண்டதை எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறான். தாழ்ந்த ஜாதி என அறிவிக்கப்பட்ட தனது வீட்டில் தலைவர்கள் உணவு அருந்திட உள்ளதை கிராமத்தில் உள்ள ஏனையோரிடம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறான்.
ஆனால், அடுத்த நாள் ஊர்வலம் செல்கிறது. தலைவர்கள் தனது வீட்டிற்கு வர மறுக்கிறார்கள். நேரம் இல்லாததால் அடுத்த ஊர் செல்லும்போது அங்கே சாப்பிடுகிறோம் என்று வாங்கிச் செல்கிறார்கள். மறுநாள் தனது நண்பன் மூலம், தலைவர்கள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட உணவு, வழியில் சாலையில் வீசிக் கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறான் மேக்வான்சி. தன்னையே வீசி எறிந்ததாக உணர்கிறான்.
இதற்கான விடை தேடலில், அவன் இதுவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி கொண்டிருந்த பெருமிதக் கருத்து தகர்கிறது. மாவட்ட, மாநிலத் தலைவர்கள் மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கே விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய பன்வார் மேக்வான்சிக்கு கிடைத்தது ஏமாற்றமே.
தனது தந்தையார், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிப் பள்ளிக்கு செல்வதை எதிர்த்ததும், அந்த அமைப்பு, தலித்துகளின் நன்மைக்கு எதிரான அமைப்பு என்று சொன்னதும் தற்போது நினைவு வருகிறது.
மேக்வான்சியின் நண்பர் மூலமாக ஓஷோ வின் நூல் படிக்கத் தொடங்கியதும் அதனைத் தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கபீர், ஜோதிராவ் பூலே ஆகியோரின் நூல்களைப் படிக்கப் படிக்க, கண் திறக்கிறது. அறிவு விசாலமாகிறது.
ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் கூறப்பட்ட கருத்து அனைத்தும் எதிராக இருப்பதை உணர்கிறான். பார்ப்பன - பனியா மேலாதிக்கத்திற்கும், இவர் களுக்கு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அடியாட்களாக இருந்து முஸ்லீம்களை எதிர்ப்ப தற்கும் தான் என்பது மேக்வான்சிக்குப் புரிகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தத் துணிகிறான் இளை ஞன் மேக்வான்சி. 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை காரணமாகக் காட்டி நடத்தப்பட்ட படுகொலைகளை விசாரித்திட்ட மனித உரிமைக் குழுவின் முன்பாக மேக்வான்சி சாட்சியம் அளிக்கிறார். நண்பர் துணையுடன் துவங்கிய டைமண்ட் இந்தியா எனும் சிறு இதழ் மூலம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார். ஆனால், சங் பரிவாரங்கள் மூலம் அச்சுறுத்தல் துவங்குகிறது. தனக்குத் துணையாக எழுத் தாளர்கள், மனித உரிமைக் குழுவினர் இருப்பது ஆறுதல் அளிக் கிறது. இதில் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியா ரின் இயக்கத்தில் தனது தந்தையும் இருந்ததாக கூறிய முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி அருணா ராய்.
இவரது கடும் எதிர்ப்பை அறிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீண்டும் மேக்வான்சியை சேர்த்திடவும் அரசியலில் பதவி தர முன்வருவ தையும் அவர் நிராகரிக்கிறார். தன்னை ஒரு அம்பேத்கரியவாதியாக அறிவித்து, சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைக்கும், சமூக அநீதிக்கும், சமத்துவமின்மைக்கும் எதிராக செயல்பட உறுதி ஏற்கிறார் தற்போது 45 வயதை நெருங்கும் பன்வார் மேக்வான்சி.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எந்த முறையில் செயல்படுகிறது; அதன் உறுப்பினர் தன்மை என்ன? அதன் தலைமையில் யாருக்கு முக்கியத் துவம்? எத்தனை அமைப்புகள் அதன் பின்னணி யில் உள்ளன? அதன் ’ஷாகா’வில் எத்தகைய ஆயுதப் பயிற்சி தரப்படுகிறது என்பது பற்றியும், ஹிந்து என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பில் எந்தவித புரிதலும் இல்லாமல் தன்னைப் போலவே ஆயிரக்கணக்கில் ஈடுபட்டுள்ள பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உணர்ந்திட வேண்டும் என்பதையும், முஸ்லீம் எதிர்ப்பு என்பது எவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்பதையும், விளக்கமாக “நான் இந்துவாக இருக்க முடியவில்லை” "I could not be Hindu" எனும் நூலில் தெரிவித்துள்ளார் பன்வார் மேக் வான்சி. இந்தியில் எழுதப்பட்ட நூல், ஆங்கிலத் தில் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நிறைய செய்திகள், சம்பவங்கள் என நூல் முழு வதும் தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
மத்தியில் ஆட்சியாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் செயலாற்றுபவர் களாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் உள்ள இந்த காலகட்டத்தில், அந்த அமைப்பில் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தங்களை ஈடு படுத்திக் கொள்ளும் சூழலில், பன்வார் மேக்வான் சியின் இந்த நூல், ஆர்.எஸ்.எஸ்.-ன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. மேலும், அந்த அமைப்பை பற்றிய விழிப்புணர்வையும், புரி தலையும் உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.
No comments:
Post a Comment