கரோனா - ஏழை எளியோரைக் காப்பீர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

கரோனா - ஏழை எளியோரைக் காப்பீர்

1492ஆம் ஆண்டிலிருந்து 480 ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டின் காலனி யாக கியூபா இருந்த போது அம்மக்கள் பட்ட இன்னல்களை அளவிடவே முடி யாத நிலை. அடுத்து அமெரிக்காவின் கோரப் பிடியில் சிக்கி கியூபா மக்கள் பட்ட வறுமையையும் துயரத்தையும் துயரங்களையும் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான மக்கள் எண்ணற்ற தியாகங்களை புரிந்து கொடுமையும் கொடுங்கோன்மையும் நிலைக்க இல்லை. 1959 சனவரியில் கியூபா மக்கள் விடுதலை காற்றினை நுகர்ந்தனர். இது ஒரு வரலாற்றுத் தகவல்.


உலகின் மூலை முடுக்குகளில் மக்கள் நடத்திய போராட்டம் என்று கருதிய இந்தியா - கியூபா நட்பு அமைப்புகள் அமைப்பினர் தெருத் தெருவாக திரட்டிய நன்கொடைப் பணத்தில் 10105 டன் கோதுமையை கியூபா மக்களுக்கு அனுப்பினர். அதனை பெற்றுக் கொண்ட காஸ்ட்ரோ "10105 டன் ஒருமைப்பாட்டையும், 10105 டன் ஆதரவையும் அனுப்பியுள்ளீர் கள்" என்று கூறினார்.


கோதுமைகளை ரொட்டிகளாக தயா ரித்து பசியில் வதைபடும் மக்களுக்கு பிரதி தினம் நான்கு பிரட் பாக்கெட்டு களை வழங்கி இல்லத்தில் முடங்கிக் கிடந்த மக்களைக் காத்தனர். முன்னுதார ணமாக ஏற்று, அண்மைக்காலமாக கரோனா நோய்த் தொற்றால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் தினக்கூலி செய்து வயிற்றுப் பசியால் வாழும் இந்திய கிரா மப்புற மக்களுக்கு அரசின் இருப்பி லுள்ள உணவு தானியங்களை வழங்க லாம். இது ஒரு தற்காலிக தீர்வாய் அரசு கள் மேலும் கீழுமாய் இருப்பவர்கள் செய்தால் என்ன?


பாதிக்கப்பட்ட மக்களை பேரிடரில் இருந்து காப்பதை விட்டு தினமும் ஒரு ஆலோசனையும் அறிவுரைகளையும் கூறுவதால் பயன் ஏதுமில்லை.


பணக்காரர்களின் பரிதாபப்பட்ட வங்கியில் வாங்கிய பல லட்சம் கோடிக் கடன் தொகையை தள்ளுபடி செய்யும் அரசு, ஏழை எளியோரை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் எப்போது எண்ணி பார்ப்பார்கள். உணவுக்கு வழிக்காணா மல் ஊர் அடங்கை நீட்டித்தால் போதுமா?


- அ.இரா.முல்லைக்கோ, பெங்களூரு


No comments:

Post a Comment