ஆளுநரின் உத்தரவால் மும்பை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 14, 2020

ஆளுநரின் உத்தரவால் மும்பை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்

மும்பை, மே 14- கரோனா தடுப்பு நட வடிக்கையில் சரிவர செயல்படாத  மும்பை மாநகராட்சி ஆணையர் பிரவீன் பர்வேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத் தில்தான் அதிக கரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு 17ஆயிரத்திற்கும் மேற் பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 694 பேர் பலியாகியுள்ளனர்.


மராட்டியத் தலைநகர் மும்பையில் அதிக பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதால், அங்கு கரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


இந்நிலையில், இம்மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர் பாக மத்திய குழு ஆய்வு செய்தது. இதில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாத  மும்பை மாநகராட்சி ஆணையர் பிரவீன் பர்வேஷ் மீது புகார் எழுந்தது.


இந்தப் புகார்கள் எழுந்ததையடுத்து, அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டு, ஊரக மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த அய்ஏஎஸ் அதிகாரி இக்பால் சிங் சகால், மும்பை மாநகராட்சி ஆணையராக  நியமிக்கப் பட்டார்.


ஆனால், கடந்த மே மாதம் 4ம் தேதி அம்மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தர வில், மாநிலத்தில் தற்போதுள்ள சூழ் நிலையில் நோய் தடுப்பு பணியில் ஈடு பட்டுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநகர ஆணையர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மார்ச் மாதம் முதல்வாரத்தில் மராட் டிய மாநில ஆளுநர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகராட்சி ஆணை யர்களுடன் காணோலி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார், இதில் புனே மற்றும் மும்பை மாநகராட்சி ஆணையர்கள் கலந்துகொள்ளவில்லை.  


இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்து மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையான ஆட்சேபனை


தெரிவித்திருந்தார்.  அப்போதிலிருந்தே இரண்டு ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் மாநில அரசின் உத்தர வையும் மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment