மும்பை காணொலியும்! தலைவர் வீரமணியும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

மும்பை காணொலியும்! தலைவர் வீரமணியும்!

வி.சி.வில்வம்



பெரும் தொற்றுப் பரவிய காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வழிநடத்துவது சாதாரணம் அல்ல; அது அசாதாரணம்!


ஏனெனில் யாருக்குமே அதில் முன் அனுபவம் இருக்காது. பெரியார் தந்த பகுத்தறிவில் விரைவாய் சிந்தித்து, அதிரடியாய் செயல்பட்டு, வேகமாய் நடை முறைக்குக் கொண்டு வருவதே ஒரு போர்க்கால அணுகுமுறை! அதை நடைமுறை செய்தவர் நம் தலைவர்!


2 மாதத்தில் 100 கூட்டங்கள்!


ஊரடங்கில் மனச் சோர்வு கூடாது என்பதற்காகவே  தோழர்கள் தினமும் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார்!


அவ்வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, மதுரை மாநகர், தேனி, பழனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்ப கோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப் பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், இலால்குடி, திருச்சி, கரூர், தாராபுரம் , கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலமலை,  கோபிசெட்டிப் பாளையம், ஈரோடு, நாமக்கல், சேலம், மேட்டூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், திண்டிவனம், திருவண்ணாமலை, செய்யாறு, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், தென் சென்னை, வட சென்னை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி ஆகிய 63 கழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியிலும் கூட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. தவிர பெங்களூர், மும்பை, மலேசியா வரை நிகழ்ச்சிகள் முடிந்துள்ளன.


60 நாட்களில் 63 மாவட்டங்கள், ஒன்றியப் பகுதி களில் 2 ஊர்கள், இந்தியாவில் 2 மாநிலங்கள், ஒரு வெளிநாடு.


கலந்துரையாடல் நிகழ்ச்சியாகத் தொடங்கி பாரதி தாசன் பிறந்த நாள், நாகம்மையார் நினைவு நாள், பட்டிமன்றங்கள், தனிப் பேச்சுகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்பல கூட்டங்கள்.


மேலும் மாவட்டக் கலந்துரையாடல், மகளிரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, தொழிலாளர் அணி, வழக்குரைஞர் அணி, இளைஞரணி என எத்தனை! எத்தனை!! இதையெல்லாம் சேர்த்தால் கூட்டங்களின் எண் ணிக்கை நூறைத் தாண்டும்! மிகைப்படுத்தும் எண்ண மில்லை; எண்ணிப் பாருங்கள், திகைப்பு தெரியும்!


மும்பை செல்வோம் வாருங்கள்!


தமிழ்நாட்டின் பல காணொலி கூட்டங்களில் பங் கேற்ற தமிழர் தலைவர் அவர்களை மும்பைத் தோழர் கள் பார்க்க விரும்பினர்! அவ்வகையில் மும்பை காணொலி கூட்டம் 03.05.2020 அன்று நடைபெற்றது.


மும்பையைப் பொறுத்தவரை கட்சி, இயக்க வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக இருப்பார்கள். ஆசிரியர் அவர்கள் மும்பை சென்றால் அமைப்பு வேறுபாடின்றி அனைவரும் அன்பு காட்டுவர்! நிகழ்வுகளில் பங்கேற்பர்.


மும்பை பாரம்பரியம்!


திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், அண்ணல் அம்பேத்கர் அமைப்புகள், தமிழர் இயக்கங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின்  இன்றைய பொறுப்பாளர் களை மட்டுமல்ல; அவர்களின் பெற்றோர்களை, ஏன் அவர்களின் முன்னோர்களையும் கூட ஆசிரியர் அவர்கள் அறிவார்கள் என்றால் மும்பைக்கும் தலை வருக்குமான பாரம்பரியத்தை அறியலாம்.


அந்த வகையில் மும்பை காணொலி கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பேச சொல்லி ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள்.


நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியரின் பணிகள், அவர்களின் வழிகாட்டுதல்கள், இயக்க, அரசியல் செயல்பாடுகள், ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தோழர் களுக்கு உதவிகள், அதுகுறித்த மேற்பார்வைகள் எனக் கடந்த 40 நாள் நிகழ்வுகளைக் கழகப் பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் எடுத்துக் கூறினார்.


மும்பைத் தோழர்கள்!


மும்பை மாநில முன்னாள் தலைவர் தயாளன் அவர்கள் பேசும்போது, தாராவி தோழர்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். கட்டுப்பாடு மிக்க நமது கழகத் தோழர்கள் அய்யாவின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பர் எனக் கூறினார்.


மும்பை மாநிலத் தலைவர் கணேசன் அவர்கள், தாராவியின் மோசமான சூழல், அதன் அபாயகட்டம், பொதுக் கழிவறைப் பிரச்சினைக் குறித்துப் பேசினார். சில விசயங்களில் மக்களின் அலட்சியம், அதேநேரம் அரசின் பாராமுகம் குறித்தும் எடுத்துக் கூறினார்.


இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் குமண ராசன் அவர்கள், மும்பைத் தமிழர்கள் குறித்துக் கனி வோடு விசாரிக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி! மராத்திய மாநிலத்தில் மும்பை, புனே பகுதிகளில் 80 விழுக்காடு பாதிப்புகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து தற்காலிகமாக வேலைக்கு வந்த 6 ஆயிரம் பேர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இவர்கள் கட்டிட வேலை கள், கழிவு நீர் அகற்றுதல், பாத்திரம், வளையல் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்திற்குத் திரும்ப தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர் அவர்களும் இதுதொடர் பாய் அழுத்தம் கொடுக்க வேண்டும். மும்பையில் இருந்து தமிழகத்திற்கு 60, 70 பேர் நடந்தே வர முயன் றனர். காவல்துறையின் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 92 ஆயிரம் கிலோ உணவுப் பொருள்கள், பல்வேறு மக்களின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் திராவிடர் கழகத் தோழர்களின் பணி மிகவும் சிறப் பானது என்று கூறினார்.


அன்பழகன் அவர்கள், உதவி செய்வதற்குச் சிரமமாக இருந்தாலும், தோழர்கள் கடும் முயற்சி எடுத்து தான்


செய்து வருகிறார்கள். தற்காலிகமாக மும்பையின் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அரசு உடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


காமராஜ் அவர்கள், அய்யா அவர்கள் உடல் நலத்தைப் பேண வேண்டும். அய்யா அவர்களின் பேச்சைக் கேட்க ஆவலாய் இருக்கிறேன். எனது தாயார் அருகில் இருக்கிறார். அவரும் தங்களை நலம் விசாரிக்கிறார் என்றார்.


மும்பைப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச் சந்திரன் அவர்கள், பத்துக்குப் பத்தில் வாழ்வாதாரம் கொண்ட தாராவி மக்களை எப்படி முடக்க முடியும்? அவர்கள் வெளியே வந்துதான் ஆக வேண்டியுள்ளது. வாட்சப் வழி வரும் விடுதலையை பல நூறு பேருக்கு அனுப்புகிறேன். அதேபோல வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையையும் ஆதரவாளர்கள் பலருக்கு அனுப்பு கிறேன். இலெமூரியா அறக்கட்டளைச் சார்பாகக் கூடுதல் பணிகள் செய்து வருகிறோம் என்றார்.


மும்பை மாநிலச் செயலாளர் அந்தோணி அவர்கள், உடல்நிலைச் சரியில்லை என மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால் கவனிப்புகள் குறை வாக இருக்கிறது. கரோனா தொற்றுக்காகச் சந்தேகப் பட்டு அழைத்துச் சென்றால் பரிசோதனைகள் செய்வ தில்லை. மேலும் உணவுகள் மிகக் குறைவாகவே கொடுக்கிறார்கள் என்றார்.


மாறன் அவர்கள், தாராவி குறித்துத் தோழர்கள் விரிவாகச் சொல்லியுள்ளார்கள். இயன்றவரைப் பிற ருக்கு உதவிகள் செய்து வருகிறோம் எனக் கூறி, தம் தாயாரையும் ஆசிரியரிடம் பேசச் சொன்னார்.


ஆசைத்தம்பி அவர்கள், எங்களுடன் தொடர்பு கொண்டு விசாரித்த அய்யாவுக்கு நன்றி! இலெமூரியா அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகள் செய்கிறார்கள். நாங்களும் பாதுகாப்பாய் இருக்கிறோம். அய்யா அவர்களும் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும் என்றார்.


நங்கை அவர்கள், மக்களின் சிரமம் மிகுந்த கவலையைக் கொடுக்கிறது. இன்னும் உதவிகள் செய்ய விரும்பினாலும் களத்தில் இறங்கி செய்வதில் நடை முறை சிக்கல்கள் இருக்கிறது. தோழர்களின் உதவியு டன் முடிந்த வரை செய்கிறோம். தமிழர்கள் தவிர பிறரும் பெரும் பாதிப்பில் உள்ளனர். ஊரடங்கிற்கு முன் கால அவகாசம் கொடுத்திருந்தால் மக்களைப் பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கவும், தற்காலிகமாக வேலைக்கு வந்த தமிழர்களை ஊருக்கு அனுப்பவும் வாய்ப்பாக இருந்திருக்கும் என்று கூறினார்.


முருகன் அவர்கள், நாங்கள் ஓரளவு பாதுகாப்பாய் இருக்கிறோம். ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.


இராஜசேகரன் அவர்கள், மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. தவிர தமிழ் மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்து வருகிறோம் என்றார்.


சித்தார்த்தன் அவர்கள், ஜாதி, மதப் பிரிவினை கொண்ட தமிழர்கள் இப்போது ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். இலெமூரியா அறக்கட் டளை மூலம் நாங்கள் உதவிகள் செய்து வருகிறோம். தினமும் பெரியார் கருத்துகளை முகநூலில் பதிவிட்டு வருகிறேன் என்றார்.


அனைவரின் கருத்துகளையும் கேட்டு, அவர்களு டன் உரையாடிய தமிழர் தலைவர் இறுதியாகப் பேசினார்.


உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!


தமிழ்நாடு முழுவதும் காணொலி கூட்டங்கள் நடந்து வருகிறது. எனினும் மும்பைச் சந்திப்பு உற்சாக மாக இருக்கிறது; சற்றே ஆறுதலாகவும் இருக்கிறது! அதேநேரம் கவலையும், வேதனையும் மிகுந்திருக் கிறது. குமணராசன் அவர்களின் செய்திகள் உருக்கமாக இருந்தன.


தோழர்கள் பேசிய கருத்துகள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். அதை அறிக்கை யாக எழுதி அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் மற்றும் தொடர்வண்டி, விமானத் துறை அலுவலகத்திற்கும் அனுப்பி வைப் போம். தற்காலிகமாக அங்குள்ள 6 ஆயிரம் தமிழர்கள் இங்கு வருவதற்கான வழிகளைப் பார்ப்போம். அவர் கள் இங்கு வந்த பிறகு நம்மால் ஆன உதவிகளை நாம் செய்வோம்.


உங்கள் குரல்களை எல்லாம் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். தாராவிப் பகுதிப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இதுகுறித்த தொடர் கருத்துகளை உருவாக்க வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் பெரும் உதவிகள் செய்யும் குமணராசன் உள்ளிட்ட நம் தோழர்களுக்குத் தலைதாழ்ந்த நன்றிகள்!


கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. யாரும் மனம் தளர வேண்டாம், விரக்தி அடைய வேண்டாம், நம்பிக்கையோடு இருங் கள். உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள் ளுங்கள். ஏனெனில் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.


சோதனைகளைச் சாதனையாகவும், தடைக் கற் களைப் படிக்கற்களாகவும் மாற்றுவோம். ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இன்றி மனிதகுலத்தை மீட்டெடுப் போம்! வெற்றி பெறுவோம்! கரோனவை தோற்கடிப் போம் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.


நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவு செயலா ளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழகச்¢ செயலா ளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரை யாற்றினர்.


இறுதியில் மும்பைத் தோழர் கண்ணன் நன்றி கூறினார்!


No comments:

Post a Comment