கை மற்றும் மேற்பரப்பைப் பாதுகாக்கும் சானிடைசர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

கை மற்றும் மேற்பரப்பைப் பாதுகாக்கும் சானிடைசர்

இந்தியாவின் முன்னணி பெயிண்ட் ஏசியன் பெயிண்ட்ஸ் வைரோப்ரோடெக் ரேஞ்ச் கை மற்றும் மேற்பரப்பு சானிடைசர்களை அறிமுகம் செய்வதன் மூலம் சானிடைசர் பிரிவில் அதன் நுழைவை அறிவித்துள்ளது.


கோவிட்-19 நிவாரணத்திற்கான பல்வேறு நடவடிக்கை களில் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கும், இந்தச் சோதனை காலங்களில் கை மற்றும் மேற்பரப்பு சானிடைசருக்கான பெரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் ஏசியன்


பெயிண்ட்ஸ் இந்த வகைக்குள் நுழைந்துள்ளது என ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அமித் சிங்லே கூறினார்.


பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு


ஆன்லைன் மூலம் வகுப்புகள்


உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் கரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன.


அனைத்து துறைத்தலைவர்கள் தயாரித்த அட்டவணை களின் படி குகூள் கிளாஸ் ரூம் (Google Class Room) மற்றும் சூம் (Zoom) போன்ற இணைய தள சேவைகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடத்துகின்றனர். சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்க கத்தால் தயாரிக்கப்பட்ட யூடியூப் வீடியோக்கள் (YouTube), வாட்ச்அப் செயலி (Whatsapp) மூலம் மாணவ, மாணவி களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாட்ச்அப் மூலம் ஆசிரியர் களும், மாணவர்களும் கேள்வி பதில்களை பகிர்ந்து கொள் வது மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது.


குகூள் கிளாஸ் ரூம் (Google Class Room) மற்றும் சூம் (Zoom) போன்ற செயலிகள் மூலம் மாணவர்களுக்கு அசைன்மென்டஸ் (Assignments), கேள்வி பதில்கள் ஆகியவை அனுப்பப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன.


மேற்கண்ட முயற்சிகள் அனைத்தும் இக்கல்லூரி முதல் வரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment