புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடில்லி. ஜூன் 11- புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர் களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட் டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பலர் நடந்தும், சைக்கிளிலும், லாரி கள் என ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்க ளுக்காக மத்திய அரசு சிறப்பு ரயில்இயக்கி வருகிறது.  புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பு வது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இவ்வழக்கு நேற்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப் பட்டன. அதில் 57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க் கமாக சொந்த ஊர் திரும்பி யுள்ளனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தார்.


இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment