ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:                     



  • சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் நுழைந்து, லடாக்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது; ஆனால், பிரதமர் மோடி மவுனி யாக உள்ளார் என காங்கிரஸ் கட்சி, மோடி அரசைக் குற்றஞ்சாட்டியுள்ளது.

  • அய்தராபாத் நகரில் இணையம் வழியே வகுப்புகள் நடத்திடுவதில் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வகுப்புகள் குறித்த நேரத்தில் துவக்கப்படுவதில்லை; குழந்தைகளுடன் பெற்றோர் களும் ஏற்படுத்தும் சத்தம், இவை அனைத்தும் குழந்தைகள் ஏதும் கற்றுக்கொள்ளாமல் முடிகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.க.வின் மத்திய தலைமை திட்டமிட்டுதான் கவிழ்த்தது என தற்போதைய ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • தமிழ் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1927 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை முப்பத்தி ஏழாயிரத்தை நெருங்குகிறது.

  • தமிழ் நாட்டில் ஊர்களின் பெயரை தமிழில் உச்சரிக்க பயன்படுத்தும் சொற்களையே ஆங்கில எழுத்தாகவும் பயன்படுத்த வேண்டும் என தமிழ் நாடு பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்துள்ளார். எடுத்துக்காட்டாக, எழும்பூர் என்பது ஆங்கிலத்தில் எக்மோர் என்று உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்டும் வந்தது. இனி, எழும்பூர் என ஆங்கிலத்தில் எழுதவும் வேண்டும்.

  • அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தி கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாயிட் உடல் நேற்று அடக்கம் செய்யப் பட்டது. அவரது இறப்பு, அமெரிக்க அரசியலிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கருதுகின்றனர்.

  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில், மேகதாது அணை பற்றி கருநாடக அரசின் கருத்துக்கு தமிழ் நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், முதல் கூட்டம் பாதியிலேயே நின்று போனது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:                                                                  



  • மத்திய அரசின் நீர்வளத்துறை சார்பில் குஜராத் மாநிலத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தில், 10.64 லட்சம் வீடு உள்ள எஸ்.சி./எஸ்.டி. பிரிவினரில் 5.84% மக்களுக்கு மட்டுமே முதல் கட்டமாக சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் கரோனா தொற்று மற்றும் நிறவெறிக்கு எதி ரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்திட சூழலில், நியூயார்க் நகரில் சீக்கியர் கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் பல நகரங்களில் குருத்வாரா மூலம் இந்தப் பணியை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


- குடந்தை கருணா,


11.6.2020


No comments:

Post a Comment