பெரியார் கேட்கும் கேள்வி! (17) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (17)


“ஆங்கிலத்தில் கேஸ்ட் (caste), கிளாஸ் (class) என்ற இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும்.


ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையால் ஏற்படுவது. தொழிலும். தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். ஜாதிகள், அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு. பிறக்காதவனுக்குக் கிடைக்கவே கிடைக்காது.


மேல்நாட்டில் ஜாதி (caste) இல்லாததால், அங்கு பொது உடமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (class fight) துவக்க வேண்டியதாயிற்று.


இங்கு ஜாதி (caste) இருப்பதால் பொது உடமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (caste fight) துவக்க வேண்டியதாக உள்ளது.


இதுதானே நியாயம்? இது எப்படி தவறு?


- தந்தை பெரியார் உரை, 'குடிஅரசு', 25.3.1944


- ‘மணியோசை’


No comments:

Post a Comment