ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:                     



  • அய்ந்தாம் வகுப்பு வரை, பள்ளிகள் காணொலி மூலம் வகுப்பு நடத்துவதற்குப் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெலங்கானா மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • தமிழக அரசின் 12 நாள் முழு அடைப்பு அறிவிப்பு, அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிக்காட்டுகிறது. சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில், முழு அடைப்பை நீடிக்கும் வாய்ப்பு இல்லை என்றும், அவ்வாறு வதந்தி பரப்புகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அரசு, தற்போது முழு அடைப்பை அறிவித்துள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:                                                   



  • மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50% இடங்களை ஒதுக்கிடக் கோரி, திராவிடர் கழகம், தி.மு.க, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை வருகிற ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

  • ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சட்ட பேரவை தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • இந்திய - சீன எல்லையில் நடைபெறும் இராணுவச் சண்டைகள் குறித்து பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏன் அமைதி காக்கின்றனர்? என காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.


தி இந்து, டில்லி பதிப்பு:



  • தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளித்திடும் அரசின் ஆணை குறித்து தலையங்கச் செய்தி தெரிவிக்கிறது.


- குடந்தை கருணா,


17.6.2020


No comments:

Post a Comment