கீழடியில் அகழாய்வுப் பணி: புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

கீழடியில் அகழாய்வுப் பணி: புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு


திருப்புவனம், ஜூன் 17- சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் யூனியனைச் சேர்ந்த கீழடி யில் தற்போது 6-வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளி லும் நடைபெற்று வருகிறது.


கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வுப் பணிகள் நடை பெற்றன. இதில் நேற்று 2 மண் பானைகள் கண்டெடுக் கப்பட்டன. இதுதவிர புதி தாக மீண்டும் ஒரு குழி தோண்டும் பணியும் நடை பெற்றது.


கொந்தகையில் நடந்த பணியில் நேற்று புதிதாக மனித மண்டை ஓடு பாகங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் இதுவரை 12-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டன. ஒவ்வொரு முது மக்கள் தாழியையும் மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலை மையில் தொல்லியல் அலு வலர் பாஸ்கரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இது வரை 3 முதுமக்கள் தாழிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் உள்ளே உள்ள மனித எலும் புகளும் மற்றும் சிறிய பொருட்  களும் எடுக்கப்பட்டன.


அகரத்தில் கவிழ்ந்த நிலை யில் பானை மற்றும் அதன் அருகே உடைந்த நிலையில் மற்றொரு பானை, நத்தை ஓடுகள், சங்குவளையல்கள் உள்பட பல்வேறு பொருட் கள் கிடைத்துள்ளன.  மணலூ ரில் சுடுமண் உலை, மண் திட்டுப் பகுதி ஆகியவை இருந்தது தெரியவந்தது.


எனவே 4 இடங்களிலும் கூடுதலாக குழிகள் தோண்டி அகழாய்வுப் பணிகள் நடை பெற்று வருகின்றன.


No comments:

Post a Comment