செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 19, 2020

செய்தித் துளிகள்....

* டில்லியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்த் முகமது, கரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை மயானத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார். (மதவாதம் பேசுவோர் சிந்திக்கவேண்டிய தருணம் இது).


* ரேஷனில் கடைகளுக்கு அனுப்பிய ரூ.500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் தரமற்ற காரணத்தால், 6.76 லட்சம் தொகுப்புகள் மட்டுமே விற்பனை; மொத்த இருப்பு ரூ.33.83 கோடி.


* சீனா - இந்தியா தாக்குதலைத் தொடர்ந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் இந்தியாவில் நிறுத்தம்!


* இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் - நிலையான பெரிய வங்கிகளுக்குத் தங்கள் கணக்குகளை மாற்றி வருகின்றன.


* கதிர் வீச்சுமூலம் கரோனாவைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடக்கிறது.


* இந்தியா - சீனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளும் என்பது ருசியாவின் கருத்து.


* ஜூன் 30 வரை சென்னை உள்பட முழு ஊரடங்கு செயல்பாட்டில் உள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு.


* அடுத்து சில நாள்களில் கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மய்யம் தகவல்.


* சிதம்பரம் நடராசர் கோவில் தேரோட்டம் ரத்து - ஒரிசா, பூரியிலும் ரத யாத்திரையைத் தடை செய்தது உச்சநீதிமன்றம்.


* ஊர்ப் பெயர்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மாற்றும் அரசாணையை தமிழ்நாடு அரசே ரத்து செய்து கொண்டு விட்டது.


* அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் தற்காலிக உறுப்பினருக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றித் தேர்வு.


* தமிழக உயற்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கரோனா தொற்று!


* சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் மேல்.


* சென்னையில் ஊரடங்கை மீறுகின்றவர்களைப் பிடிக்க ட்ரோன் கேமிராக்கள்மூலம் கண்காணிப்பு - காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் அறிவிப்பு.


* ஜூன் 30 வரை இறைச்சிக் கடைகளுக்குத் தடை.


* செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம்.


* எல்லைப் பிரச்சினை: சீன உணவுகளைப் புறக்கணிப்போம் என்கிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அந்துலே.


* ருசியாவில் முதல் முறையாக 18 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.


* கரோனாவின் இரண்டாவது தாக்குதல் இலையுதிர் காலத்தில் சாத்தியம் என உலக சுகாதார நிறுவனம் தகவல்.


* ‘ஓ' வகைப் குருதிப் பிரிவு உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பு குறைவு.


No comments:

Post a Comment