‘‘தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழியாக மட்டும் இருக்க வில்லை; மாறாக, அது ஆரி யர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுமைக்குமான மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது என் பது உண்மை ஆகும். உண் மையில் இந்தியாவெங்கிலும் நாகர் களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர் களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களி டமும், அவர்களது மொழியிட மும் ஏற்படுத்திய தாக்கத்தை யும் அடுத்தபடியாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதில் விந்தை என்னவென் றால், இந்தத் தொடர்பு வட இந்திய நாகர்களிடம் ஏற் படுத்திய விளைவு, தென் இந்திய நாகர்களிடம் தோற்று வித்த விளைவிலிருந்து பெரி தும் மாறுபட்டிருந்தது என்ப தாகும். வட இந்தியாவில் இருந்த நாகர்கள், தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர்.
ஆனால், தென்னிந்தியா வில் இருந்த நாகர்கள் அவ் வாறு செய்யவில்லை. தமி ழையே தங்கள் தாய்மொழி யாகத் தொடர்ந்து பேணிக் காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ள வில்லை.
இந்த வேறுபாட்டை மனத் திற் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள லாம்.
(டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
நூல் தொகுப்பு 14, பக்கம் 95)
ஆரியராவது திராவிடரா வது என்று கோணல் வார்த் தைகளால் உளறும் பேர்வழி களுக்குப் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர் களின் இந்த வரலாற்று ஆய்வு, பாடம் சொல்லிக் கொடுக்கும். ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் தம் ‘ஞானகங்கை' நூலில் (Bunch of Thoughts) ‘‘நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்ட நாம் ஆரி யர்கள் - அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்தான்'' என்று எழுதி வைத்துள்ளாரே!
மனுதர்மம் அத்தியாயம் 10 - சுலோகம் 44இல் திராவிடம் இடம்பெற்றுள்ளது.
இந்த உண்மைகளைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் ஆவணம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியவாதிகளும் தெரிந்துகொள்வார்களாக!
- மயிலாடன்
No comments:
Post a Comment