காணொலியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட மாணவர் கழகக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

காணொலியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட மாணவர் கழகக் கருத்தரங்கம்


வேலூர், ஜூன் 18- வேலூர் மண்டல மாணவர் கழகம் சார்பில் காணொலி மூலம் கருத்தரங்கம் 30.5.2020 அன்று  மாலை 5 மணியளவில் வேலூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.சி.தமிழ்நே சன் வரவேற் புரை ஆற்றினார்.


"புரட்சி செய்வோம்" தலைப்பில் கருத்தரங்க நடுவ ராக மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமை ஏற்றார்.


மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.அஜிதன் ‘புரட்சி செய்வோம் அரசியலில்’ என்ற தலைப்பி லும், வழக்குரைஞர் ம.வீ. அருள்மொழி ‘புரட்சி செய் வோம் _ குடும்பத்தில்’ என்ற தலைப்பிலும், சென்னை மண் டல மகளிர் பாசறை செயலாளர் ஓவியா அன்புமொழி ‘புரட்சி செய்வோம் _ காதலில்’ என்ற தலைப்பிலும், மேட்டுப் பாளையம் மாணவர் கழக துணைத் தலைவர் இரா. அன்புமதி ‘புரட்சி செய்வோம் _கல்வியில்’ என்ற தலைப்பி லும் உரையாற்றினர்.


சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் உரத்த நாடு  இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி, மாநில மாண வர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன்,வேலூர் மண் டலச் செயலாளர் பி.பட்டாபி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர் மண் டல கழகத் தோழர்கள்  உள் பட பலரும் கலந்து கொண்ட னர். வி.சி.சங்கநிதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


No comments:

Post a Comment