ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:                     



  • மத்திய அரசு மாநிலங்களுக்கு கரோனா தடுப்புப் பணியில் எத்தகைய உதவிகளைச் செய்திட உள்ளது என்பதை பிரதமர் மோடி, முதல் அமைச்சர்களுடனான உரையாடலில் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த உரை யாடலில் பங்கேற்கவில்லை. அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கலந்து கொண்டார்.

  • இந்திய எல்லையில் சீனா ஊடுருவவில்லை என மோடி அரசு தெரிவித்தாலும், அது உண்மையல்ல. இதில் ராணுவத் தலை யீட்டைத் தவிர்த்து, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பிரச்சினையைப் பேசித் தீர்வு காண்பதுதான் சரி என தலையங்கச் செய்தி கூறுகிறது.

  • கரோனா குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் நடத்திய உரையாடலில், நடைமுறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பிரதமர் பேசுவது வருத்தம் அளிக்கிறது என மற்றொரு தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு, வங்கி உள்ளிட்டவை, மூடப்பட்டு இருக்கும் என தமிழக அரசு முதன்முதலில் தெரிவித்த நிலையில், ஜூன் 20 முதல் 26 வரை வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, சில குறிப்பிட்ட பணப் பரிமாற்றத்திற்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அலுவலர் களைக் கொண்டு நடைபெறும் என அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

  • இந்திய எல்லையில் சீன ராணுவ ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ள நிலை யில், இப்பிரச்சினைக் குறித்து உண்மை நிலை என்ன? என்பதைத் தெரியப்படுத்திட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுள்ளார்.

  • மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த மூன்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து, பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.


தி இந்து, டில்லி பதிப்பு:



  • கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட் டில் அய்ம்பதாயிரத்தைத் தாண்டியது.

  • மோடி அரசின் தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில சட்ட மன்றத்தில் ஜூன் 17-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


- குடந்தை கருணா,


18.6.2020


No comments:

Post a Comment