ஜூன் 25: சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 25, 2020

ஜூன் 25: சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள்


பத்தாண்டுகள் உறங் கிக்     கிடந்த பிற்படுத்தப் பட்டோரின் உரிமைச் சாசன மான மண்டல் குழு பரிந் துரையின்படி, மத்திய அரசு பணிகளில் பிற் படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீடு அளித்து அதற்கான விலையாக பிரதமர் பதவியையும் துறந்த மாமனிதர்.


வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர் பதவி யையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரைப் போராடி னாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாட வேண்டியது, அவர்கள் தம் கடமை. இந்தக் கடமையை பெரியார் பிறந்த மண்ணில், சமூகநீதிக் காவலருக்கு அவரது பிறந்த நாளில் நாம் கொண்டாடுவதும், அவருடைய புகழைப் பாடுவதும் இயல்பே! வாழ்க வி.பி.சிங்; வெல்க சமூக நீதி. 


- கோ.கருணா நிதி, பொதுச் செயலாளர்,


அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு


No comments:

Post a Comment