ஒற்றைப் பத்தி - திடலின் பிள்ளைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

ஒற்றைப் பத்தி - திடலின் பிள்ளைகள்!


‘‘சென்னை ஓவியக் கல்லூரி யில் தான் படிப்பேன்' என்று பிடிவாதத்துடன் வந்துவிட்ட எனக்கு, என் கல்லூரிக்கும், விடுதிக்கும் இடையில் பெரியார் திடல் அமைந்திருந்தது இன்ப அதிர்ச்சிதான். பெரும்பாலான மாலை நேரம் திடலில் இருக்கும் நூலகத்திற்குள் நுழைந்து மாலை நேரத்தைச் செலவு செய்து விட்டுத்தான் நானும் ஓவியக் கல்லூரி நண்பன் பாண் டியனும் (நடிகர் சந்திரசேகரின் சகோதரர்) விடுதி செல்வோம். இன்றும் கவிஞர் கலி.பூங்குன் றன் எங்களை ‘‘திடலின் பிள்ளை கள்'' என்றுதான் கூறுவார். அந்தக் காலகட்டத்தில் நான் வரைந்த பெரியார் உருவங்கள் தான் பெரும்பாலான அடுத்த இருபத்தைந்து ஆண்டுகள் வெளிவந்த திடலின் பிரசுரங் களில் பயன்படுத்தப்பட்டவை என்பதில் எனக்குப் பெருமை. அந்தக் காலகட்டத்தில் ‘உண்மை' இதழின் அட்டைக் கேலிச் சித்திரமும் நான் வரைந்து வெளிவந்திருக்கிறது. ஆடம்பரமற்ற எளிய முறை வாழ்வு, அயராத உழைப்பு, எப்போதும் படிப்பு, படிப்பு; தொண்டர்கள், இயக்கம், தன் னைச் சுற்றித் திரியும் நாய்களின் பால் அவருக்கிருக்கிற பிரியம், வெளிநாட்டுத் தொலைக்காட்சிக் குழு கேட்கும் கேள்விகளுக்கு பெரியாரின் பதில், ஆசிரியரின் மொழி பெயர்ப்பு என்று பெரியாரின் மறைவுக்குமுன் பல்வேறு நிகழ்வுகளில் திடலில் பலருக்கும் இடையில் திரிந்து வாழ்ந்த காலங்களே சிறப்புதான்!


பெரியாரின் தலைமையில் என்  திருமணத்தை நடத்தக்  கனவு கண்ட என் தந்தைக்கு அது நிறைவேற இயலாமல் போனது பெரியாரின் மறைவால். பின்பு மதுரையில் பெரியார் மாளிகையில் சீர்திருத்தத் திரு மணத்தை எங்களுக்கு நடத்தி திருப்தி அடைந்தார்.


என் பள்ளி நாட்களின்போது என் தந்தையார் பெரியாரின் இப்புத்தகம் படித்தாயா? இப் புத்தகம் படித்தாயா? என்று தூண்டுவதுடன் புத்தகங்களைக் கொடுக்கும்போதே ‘‘பெரியாரை மறுக்கிறவன் வாழ்விலும் பெரியார் புகுந்துவிடுவார். அதை எவனும் தடுக்க முடியாது. புத்தனுக்குப் பின்  அவர்தான் இருக்கிறார். நம் சமூகம் பெரியா ரின் சிந்தனையால் கட்டப்பட்டு உயரும்'' என்று அடிக்கடி சொல் வார்.


பின்னாளில் ஓவியப் பணி யால் வேற்று மாநிலங்களுக்குச் செல்ல வரும்போது எல்லாம் (70-களின் கடைசியில் 80-களின் முதலில்) இவர்களுக்கு ஒரு பெரியார் வேண்டுமே! இவர் களுக்கு ஒரு பெரியார் வேண் டுமே! என்று என் மனதில்படும். 80-களின் கடைசியில் வடமாநி லங்களில் ரயிலில் போகும்போது தென்படுகிற சுவரொட்டிகளில் பெரியாரின் தலையைப் பார்க்க நேரிட்டபோது பெருமகிழ்ச்சி அடைவேன். இன்று புலம் பெயர்ந்த வெளிநாட்டில் வாழ் கிற தமிழ்க் குடும்பத்துக் குழந்தை அதுவும் அங்கே பிறந்து இருபது வயதைத் தாண்டிய தமிழ்க் குழந்தையின் உடன் படித்து, தமிழகத்தின் வரலாறு, கலாச்சாரம், அரசியல், பண்பாடுபற்றிய கூறுகளைப் படித்துத் தெரிந்த நார்வே பெண், சகப் படிப்புத் தோழியின், பாதிப் பில் இக்கலாச்சாரத்தை, உள் ளார்ந்த அரசியலை அறிய தமிழகம் வந்து பெரியார் பற்றி விரிவாகப் பேசியதைக் கேட்டு மகிழ்ந்தபோது தந்தை பெரியா ரையும், அவர் சிந்தனைகள்பற் றிய விரிவையும் என் தந்தை எங்களிடம் பேசும்போது பெற்ற மகிழ்வையே நானும் பெற்றேன்'' - ஓவியர் டிராட்ஸ்கி மருது.


(தமிழ்த் திரையுலகில் வரை கலைத் துறையின் முன்னோடி - புகழ்பெற்ற ஓவியர்).


 - மயிலாடன்


No comments:

Post a Comment