செங்கல்பட்டு,ஜூன்20- செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த 300 ஊழியர்களை, எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்ததைக் கண் டித்து, தொழிலாளர்கள் தொழிற்சாலை யில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் மகேந்திரா சிட்டி இயங்குகிறது. இந்த தொழிற்பேட்டையில் செல்பேசி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற் சாலை அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந் நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இல் லாமல், திடீரென 300 தொழிலாளர்களை, நேற்று முன்தினம் கம்பெனி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அனைத் துப் பணியாளர்களும், தொழிற்சாலை முன்பு திரண்டு, கையில் செல்பேசி டார்ச் லைட் வைத்து நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டபடி உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறு கையில், முழு ஊரடங்கு நேரத்தில் திருச்சி, தின்டுக்கல், மதுரை, திருநெல்வேலி பகுதி யில் இருந்து இங்கு வந்து கம்பெனியி லேயே தங்கி பணியாற்றிய எங்களை, திடீரென பணியில் இருந்து நீக்கினால், பணம் இல்லாமலும், ஊருக்கு போக முடியாமலும் தவிக்கிறோம். எனவே, எங் கள் அனைவரையும் இதே கம்பெனியில் நிரந்தரமாக பணியமர்த்தி முறையான சம்பளம் வழங்க வேண்டும் என்றனர். செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம், தொழிலாளர்களிடம் சமாதானம் செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப் போது, ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட பின் னர், நிர்வாகத்திடம் பேசி, அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment