சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் 4 மாவட்டங்களில்  ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் 4 மாவட்டங்களில்  ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு : தமிழக அரசு அறிவிப்பு


சென்னை,ஜூன்16, கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட் டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நாட்களில் வங்கிகள் 10 நாட்கள் மூடப்படும். கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்படும். டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளான 21, 28ஆம் தேதிகளில் மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மருத்துவ குழுவினரும், நோய் பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் தளர்வுகளை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச் சரவை கூட்டம் நேற்று மதியம் 1 மணிக்கு நடந்தது.


அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா நோய் தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப் பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், அய்ஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகி லுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், வருகிற 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.


அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத் தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மற்றும் மறைமலை நகர் நகராட்சி, நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது..


சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப் பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி களிலும் மற்றும் பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட் டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூ ராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளி லுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.


21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த இரண்டு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட் டுமே தனியார்  வாகன உபயோகம் அனுமதிக்கப்படு கிறது.


கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் உள் ளாட்சி அமைப்புகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment