ஜாதி பிரிவு இருக்கும்வரை உயர்வு- தாழ்வு போகுமா?
மேலும் தந்தை பெரியார் பதித்த தடம் எவ்வளவு உறுதியானது என்பதை இந்த உரையின் வெளிச்சம் நமது இளைய தலைமுறைக்கு உணர்த்தும்.
"திராவிடர் கழகம் என்பது - இந்த நாட்டு பழங் குடி மக்களின் உண்மையான ஸ்தாபனம். அவர்களு டைய இழிவைப் போக்குவதுதான் இந்த ஸ்தாபனத் தின் நோக்கமும் லட்சியமும் ஆகும்!
என்னைப் பொறுத்தவரையில் - நான் காங் கிரசில் ஈடுபட்டது.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டது,
ஜஸ்டிஸ் இயக்கம்,
திராவிடர் கழகம் - ஆகியவைகளில் ஈடுபட்டது எதற்காக?
ஏன் இவைகளில் தொண்டாற்றுகின்றேன்?
அரசியலைக் கைப்பற்ற அல்ல - பின், ஏன்? சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணு வதற்காகவே!
அரசியல் நோக்கமுடையவர்கள் என்மீது குறை கூறுகிறார்கள். ஆகவே, திராவிடர் கழகம் சமுதாய சம்பந்தமுடையதுதான்!
- 10.4.1947 சென்னை கோகலே மண்டபத்தில் பெரியார் பேருரை.
"திராவிடர் கழகத்தைப் பற்றிய ஒரு கேள்வியை சிலர் எழுப்புகிறார்கள். அது குதர்க்கமாகவோ குறும்புக்காகவோ, அல்லது தெளிவு பெறுவதற்கா கவோ இருக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருந் தாலும் நமது பதில் இதுதான்.
"திராவிடர்கள் என்று எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்களா? என்கிற கேள்விக்கு தந்தை பெரியார் அளித்த பதில் இதோ:
"திராவிடர் கழகத்தைப் பற்றி சிலருக்குத் தெரிந் திருக்கலாம்; சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே சுருக்கமாகச் சொல்லுகிறேன் - கேளுங்கள்.
"திராவிடர் கழகம் என்பது இந்நாட்டுப் பழங்குடி பெருமக்களாகிய 100க்கு 90 பேர்களான மக்களின் நலனுக்குப் பாடுபட்டு வரும் ஒரு கழகம்.
திராவிடர் கழகத்தை ஒப்புக் கொள்கிறார்களா?
இந்த 90 பேரும் தம்மை 'திராவிடர்கள்' என்றோ, அல்லது திராவிடர் கழகம் தம் நலனுக்காகவே ஏற்பட்டு உழைத்து வருகின்றதென்றோ ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று நீங்கள் கேட்கலாம்.
அவர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார் களா இல்லையா என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இவர்களுக்குள்ள இழிவு எங் களுக்குக் கஷ்டமாயிருக்கிறது! ஆகவே தான் இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இழிவு நீங்க வேண்டும் என்று இவர்களுக்கும் சேர்த்துக் கூப்பாடு போட்டு வருகிறோம்.
தண்ணீர் கஷ்டத்தை பார்க்க சகிக்க மாட்டாமல் ஒருவன் இவ்வீதியில் ஒரு குழாய் வைக்க அல்லது கிணறு தோண்ட முற்படுவானானால், அவனை "என்னய்யா, கிணறு வெட்டுகிறாயே இவ்வீதி மக்களும் இக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதாக உறுதி மொழி வாங்கிக் கொண்டாயா" என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்?
அப்படிப்பட்ட முட்டாள்தனம் தான் - திராவிடர் கழகத்தின் பிரதிநிதியாக - இந்த 90 பேரும் ஒப்புக் கொள்ளுகிறார்களா? இல்லையா என்று கேட்பதும்!
இவர்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள் ளாவிட்டாலும் இவர்களும் சமூகத்தில் "கீழ்மக்கள்" சூத்திரர்கள் - பஞ்சமர்கள் தானே!
- கோகலே மண்டப உரை, 5.12.1947
எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியர்கள் - அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாய் இருக்கவும் "விபசாரம்" "கீழ் மேல் ஜாதிக் கலப்பு" என்று சொல்லும் படியான இழிவுத்தன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றது.
மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண் டிற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என் பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டியதாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment