'விடுதலை'யின் தனித் தன்மை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

'விடுதலை'யின் தனித் தன்மை

தமிழ் இதழியல் வரலாற்றில், தனித் தடம் பதித்து, தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டிய எழுப்பிய ஏடாம் 'விடுதலை' நாளேடு 1.6.1935 அன்று முளைவிட்டு, வளர்ந்தோங்கி 1.1.1937 அன்று வார ஏட்டிலிருந்து நாளேடாக முகிழ்த்தது. அந்த வகையில் 'விடுதலை' தனது 86ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் தகுதியைப் பெற்றிருக்கிறது.


'விடுதலை' ஏடு வெளி வரும் முன்னரே தமிழ் இது ழியல் வரலாற்றில் ஆயிரக்கணக்கான நாளிதழ்களும், வார ஏடுகளும், சமயம், கல்வி, ஜாதியம், மகளிர், மருத் துவம், சட்டம், நகைச்சுவை, நாடகம், சிறுகதை போன்ற பல்வேறு துறைகளின் அடிப்படையில் ஆயிரக்கணக் கில் வெளிவந்திருக்கின்றன. காலத்தால் விடுதலையை முந்தியவை என்றாலும் மனிதனுக்கு மானத்தையும் அறிவையும் ஊட்டிய ஏடாக எவையேனும் இருந் துள்ளதா எனும் வினாவை எழுப்பிப் பார்ப்பின் விடை ஒன்றும் கிட்டவில்லை எனும் வரலாறுதான் நமக்குக் கிடைக்கின்றது.


அதற்கெல்லாம் ஒரே தீர்வைத் தந்தது ஈரோட்டுக் கிழவனின் இதழ்கள்தான் என்பதை வரலாற்று வழி நின்று ஆய்வு செய்யும் பொழுது அறிய முடிகின்றது. மறைந்த நமது அறிவாசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் நமக்கு இரண்டு ஆயுதங்களை அளித்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர் தான் உருவாக்கிய இயக்கத்தையும் அதன் வழி கொள்கை கோட்பாடு களையும் வென்றெடுத்தார். பிரச்சாரம், போராட்டம் என்பவையே அந்த ஆயுதங்கள். அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க பெரும் துணையாய் இருக்க நாளிதழ் வேண்டும் என விரும்பினார். அந்த சிந்தனை சிறைச் சாலையில் உருவாகிறது. அதன் வெளிப்பாடே 'குடி அரசு' இதழ் துவக்கம். 1934இல் 'குடிஅரசு' ஏட்டிற்கு தடை வந்தபொழுது அடுத்தடுத்து பத்திரிகைகளை தொடங்குகின்றார். அப்படி அவர் வைத்த பெயர்கள் தனித் தமிழ் நடையில் புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை என அமைந்திருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


பெயரைக் கேட்கும் பொழுதே மொழி மானமும், இனமானமும், தன்மான உணர்வும் பொங்கி எழுவதை எவரால்தான் மறுக்க முடியும்! நீதிக்கட்சி ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டையும். திராவிடன் எனும் தமிழ் ஏட்டையும், ஆந்திர பிரகாசினி எனும் தெலுங்கு ஏட் டையும் நடத்தியது. இவையெல்லாம் படித்ததவர்களுக் கான நாளிதழ்களாகவே இருந்தன. தந்தை பெரியாரின் 'குடிஅரசு' ஏடு 1925 மே 2 அன்று வந்ததும்தான் சாமா னிய மொழி வருகின்றது. (திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு பேட்டி).


ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்    


உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்    


ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி    


ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!


- புரட்சிக் கவிஞர் வரிகளுக்கேற்ப சாமானிய மக்கள் மத்தியில் கருத்தியல் புரட்சி ஏற்பட வேண்டும் என தந்தை பெரியார் எண்ணியதே இதற்குக் காரணம் என்று இதன்மூலம் நன்கு புலனாகின்றது.


1934இல் 'குடிஅரசு' தடைக்குப்பின் புரட்சி, பகுத் தறிவு, என்றெல்லாம் ஏடுகள் வந்ததைப் பார்த்து முன் னேற்றம், சமதர்மம், புதுவை முரசு, நகரதூதன் என் றெல்லாம் வந்தன. வந்த வேகத்தில் அவை காணாமல் போய்விட்டன. ஒரு கட்டத்தில் 1250 ஏடுகள் என்று அ.மா.சாமி குறிப்பிடுகின்றார். இன்றளவும் தொடர்ந்து களத்தில் நிற்பது 1.விடுதலை, 2.முரசொலி மட்டுமே (திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு பேட்டி).


1881-90இல் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவரின் முன் னேற்றத்திற்காகவே நாளிதழ்கள் நடத்தி உள்ளனர். கு.சீனிவாச சாஸ்திரியார் கி.பி.1886இல் தொடங்கிய "பிரம்ம வித்தியா" பத்திரிகை வடமொழித் தலைப்பை முதலில் கொண்டு தமிழுக்கு இரண்டாவது இடம் தந் திருக்கிறது. இந்த இதழைப் பற்றி குறிப்பிடுகிறார்


அ.மா.சாமி.


இவ்விதழ் பிராமணீயத்தை ஆதரித்தது. இவ்வித ழின் கருத்துகளைக் கண்டித்து சைவ சித்தாந்த சண்ட மாருதம் சூளை சோமசுந்தரம் 'பிரம்ம வித்தியா விகற்ப நிரசனம்' என்ற நூலை எழுதியிருக்கின்றார். அ.மா.சாமி 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் 1251 என்பதிலிருந்து இந்த உண்மையை அறியலாம்.


தமிழ் இதழியல் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, 1931இல் திருச்சியிலிருந்து வி.எம்.சாமிநாதன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு 'தேசி யம் / வார பத்திரிகை விடுதலை' எனும் பெயரிலேயே வந்திருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் அது யாருடைய விடுதலைக்கு குரல் கொடுத்ததோ? தெரிய வில்லை. நம்மைப் பொறுத்தவரை தமிழின விடு தலைக்கு மான மீட்புக் குரல் கொடுக்கும் ஒரே ஏடு தந்தை பெரியார் உருவாக்கிய 'விடுதலை' நாளேடே!


தமிழர் தலைவர் அவர்களின் தனித் திறமையால் 'விடுதலை' எட்டு பக்கங்களாக பல்வேறு செய்திகளை உள்ளடக்கி சென்னை, திருச்சி ஆகிய இடங்களிலிருந்து வெளிவரக் கூடிய சிறப்பினைப் பெற்று 86ஆம் ஆண் டில் தன் பயணத்தை தொடந்து கொண்டிருக்கிறது.


அந்த 'விடுதலை'யே நமது மூச்சுக் காற்று


அந்த 'விடுதலை'யே நம் மான மீட்புக் கருவி


அந்த 'விடுதலை'யே ஒளி காட்டும் பகுத்தறிவுச் சுடர்


அந்த 'விடுதலை'யே நமக்கு வலுவூட்டும் மாமருந்து.


எனவே 'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை' எனும் வெறிகொண்டு வாங்கிப் படிப்போம்! தாங்கிப் பிடிப் போம்! வெல்லட்டும் 'விடுதலை'யின் சமூகப் பணி!


- உ.சுப்பையா, சிவகங்கை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment