உலக மானுட விடுதலைப் போராளி பெரியார்  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

உலக மானுட விடுதலைப் போராளி பெரியார் 

பேராசிரியர் மு.நாகநாதன்



மானுட விடுதலைக்கு எதுவெல்லாம் தடையாய் உள்ளதோ, அதையெல்லாம் அடித்து நொறுக்கு என்ப வர்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள்.


அடிமை விலங்கை உடைத்து, கறுப்பு இன மக்களின் விடுதலைக்கான அடித்தளம் அமைத்த ஆபிரகாம் லிங்கன் தொடங்கி இளைய மார்ட்டின் லூதர் கிங்  காலம் வரை பல நூற்றாண்டுகளாகக் களம் கண்டும் நிறவெறியின் தாக்கம் தணியவில்லையே! ஏன்? ஏன்? அமெரிக்கா வளர்ந்த நாடாம்!


 மானுட மேம்பாட்டில் முடியாத வளர்ச்சி, வளர்ச்சியன்று. இத்தகைய வளர்ச்சியால் யார் பயன் பெற்றார்கள், யார் ஒதுக்கப்படுகிறார்கள். முதலாளித்துவ வளர்ச்சியில் இன வெறி இன்றும் காணாமல் போகவில்லையே!


வியட்நாம் போரின் போது  'ஒரே பள்ளியில் கறுப்பு வெள்ளை இன இளைஞர்கள்' அருகருகே அமரும் வாய்ப்பினை வழங்காத அமெரிக்க நாட்டிற்காக வியட்நாம் போரில், ஈடுபட்டு மக்களைக் கொன்று குவித்து, வெள்ளை கறுப்பு இன இளைஞர்கள் ஒன்றாக இறப்பதை நாள் தோறும்  தொலைக்காட்சியில் திரும்பப் திரும்பப் பார்ப்பது கொடூரமாக நெஞ்சைப் பாதிக்கும் நிகழ்வாகும்.



டெட்ராய்ட் நகரின் குடியிருப்பில் ஒருபோதும் சேர்ந்து வாழ்ந்திராத இந்த இளைஞர்கள், கொடுமையை நிகழ்த்தும் கூட்டுணர்வோடு, வியட்நாமில் ஏழைகள் வாழும் கிராமத் தின்  குடிசைகளைக் கொளுத்தும் நிகழ்வைப் பார்த்துத் துயரம் கொள்ள நேர்கிறது. இது போன்று ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் சூழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட முடியாது.


எப்படியாயினும் இந்த மடமைத்தனம் இப்போதே  நிறுத்தப்படவேண்டும்".


....."வியட்நாமில் ஏற்படுகின்ற மரணத்திற்காகவும், சிதைவிற்காகவும் உள்நாட்டில் தங்களது தகர்ந்த நம்பிக்கையுடன் இரட்டை விலையைச் செலுத்தும் ஏழை அமெரிக்க மக்களுக்காகப் பேசுகிறேன்." என முழக்கமிட்ட மானுடப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க மண்ணில் தானே சுட்டு வீழ்த்தப்பட்டார்.


அமெரிக்க ஏகாதிபத்தியம் திருந்தியதா!


2003 ஆம் ஆண்டில் ஈராக் போரில் அமெரிக்க ஈடு பட்டபோது, ஒரே ஆண்டில் செய்த செலவு என்ன தெரி யுமா? அன்றைய இந்திய பண மதிப்பில் 150 இலட்சம் கோடியாகும். உயிரிழப்பு ஆயிரங் களைத் தாண்டியது.  இந்தக் கொடுமைகளை நோபல் பரிசுப் பெற்ற ஜோசப் ஸ்டிக்கிலிசும், லிண்டா  பிலிம்சும்  எழுதிய  - "ளிஸீமீ ஜிக்ஷீவீறீறீவீஷீஸீ ஞிஷீறீறீணீக்ஷீ  கீணீக்ஷீ" எனும் நூலில்  விரிவாகக் காணலாம்.  இந்தியாவில் இன வெறிக்குப் பதிலாக ஜாதி வெறி, மத வெறியைத் தானே நாம் காண்கிறோம். 


உச்ச நீதிமன்றம் தொடங்கி எல்லா நிர்வாக அமைப் புகளிலும் பதவிகளில் குருதிக் குடிக்கும் அட்டைகள் போல ஒட்டிக் கொண்டு இருப்பது யார்? ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்து பெரும்பான்மை யான மக்களை அடக்கி ஆள்பவர்கள் யார்? யார்? நிறவெறியை ஒத்த ஜாதி வெறியர்கள் தானே  ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள்.


கரோனா தொற்றுநோய்க் காலத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ வழியின்றி இந்தியாவில் தங்களின் ஊர் களுக்கு இன்றும் திரும்பிக் கொண்டு உள் ளார்களே. ஆதிக்க சமுதாய பிரிவிலிருந்து ஒருவரையாவது இந்த ஏழைகளோடு ஊர்களுக்குச் சென்றவரை அடையாளம் காட்ட முடியுமா? இப்போது புரிகிறதா பெரியார் எனும் மானுடப் போராளியின் பீடும், பெருமை யும்.


இதற்குத்தானே அண்ணல் அம்பேத் கர் ஜாதியை அடித்தொழி என்றார். -Annihilate Caste.


1932 ஆண்டிலேயே இலண்டன் மாநகரில், அமெரிக்க  கருப்பர்  இனப் பெண் போராளி பென் அடா ரைட் உடனிணைந்து இன வெறிக்கு எதிராகப் போர் முழக்கம் செய்துள்ளார். நினைத்துப் பார்க்கிறேன்.


மார்ட்டின்  லூதர் கிங் இனவெறிக்கு எதிராக  அமெரிக்க மண்ணில் களம் காண்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் முழக்கமிட்டு உள்ளாரே! அவர் தான் பெரியார்.  அவர் தான்  உலகளாவிய மானுடப் போராளி.


ஏன் சங்கிகளும் அவர்களின் அடியாட்களும் பெரியார் கண்ட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என்று துடிக்கின்றனர்?


இளைஞர்களே இதைப் புரிந்து  கொண்டு  ஆதிக்க புரியினரை அடியோடு  வீழ்த்த களம் காணுங்கள்.


No comments:

Post a Comment