குற்றவாளியின் நிறுவனத்திற்கு ‘லைசென்சு'(உரிமம்) வாங்கிய சாமியார் ராம்தேவ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

குற்றவாளியின் நிறுவனத்திற்கு ‘லைசென்சு'(உரிமம்) வாங்கிய சாமியார் ராம்தேவ்


ஜெய்ப்பூர், ஜூன் 26 பாலியன் வன் கொடுமை வாழக்கில் கைதாகி பிணையில் இருக்கும் நபர்தான் சாமியார் ராம்தேவ்வின் அருகில் இருந்து கரோனா தொற்றுக்கான போலி மருந்தை வெளியிடும் நபர்  பலுவீர் சிங் தோமார்.


இவர் தேசிய மருத்துவ அறி வியல் நிறுவனம் என்ற ஒரு தனியார் நிறுவனத்தை ஜெய்ப்பூரில் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் மீது பொய்யான ஆய்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிட்டதாக நூற் றுக்கணக்கான புகார்கள் உள்ளது. இவரது ஆய்வு நிறுவனத்தில் படித்து வந்த மாணவி ஒருவரை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தரப்பட்ட புகாரின் அடிப்படையில், இவர் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ளார். இவரது மகன் அனுராக் தோமார் மீது பல பாலியல் வன்கொடுமை வழக்கு கள் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன.


பலுவீர் சிங் தோமாரின் ஆய்வு நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே நடவ டிக்கை எதுவும் எடுக்காமல் இருந் தார். அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நிறுவனத்தின் மீதான உரிமத்தை  ரத்து செய்தது, ஆனால், மத்திய அரசின்கீழ் அறிவியல் ஆய்வுத்துறை வருவதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் அரசு பரிந்துரை செய் துள்ளது. அதற்கு மத்திய அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்நிலை யில், சாமியார் ராம்தேவ் இவரது ஆய் வகத்தில் கரோனா குறித்த மருந்தை ஆய்வு செய்ததாகவும், அது மிகவும் வெற்றிகரமான சோதனையாக முடிந் ததாகவும் அறிவித்திருந்தார்.


No comments:

Post a Comment