இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையே!
மத்திய பி.ஜே.பி. அரசே நீதிமன்றம் மூலமாக இட ஒதுக்கீடு உரிமையை பறிக்காதே!
புதுச்சேரி, ஜூன்15, மருத்துவக் கல்வியில் மத்திய தொகுப்பில் மாநி லங்கள் அளித்த இடங்களில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக் கீடு அளிக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினரின் ஆர்ப் பாட்டம் இன்று (15.6.2020) காலை புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி மற்றும் கழகப் பொறுப் பாளர்கள், திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) உள்பட ஒத்த கருத்துடைய அரசியல் கட் சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர் கள் ஏராளமான வர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு:
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்புக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையினை நடத்தி வருகின்றது. இந்த மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாததால் பிற்படுத் தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் மருத்துவ பட்டப்படிப்பு இடங்களையும், மருத் துவ பட்ட மேற்படி இடங்களையும் முற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந் தவர்கள் தட்டி பறிக்கின்ற செயல் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் சமூக நீதி கொள்கைகளை மத்திய பிஜேபி அரசு குழித்தோண்டி புதைக்க முயற்சிப்பதாலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி திராவிட முன் னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி பல்வேறு அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்து இருந்தன.
11.06.2020 அன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசா ரணையில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல. எனவே வழக்கை திரும்ப பெறுங்கள் என்று வழக்குரைஞரிடம் உச்சநீதி மன்ற நீதிபதி மிரட்டுகின்ற தொணியில் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப் பளித்த நீதிபதிகள் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை என் பதை விளக்கியுள்ளனர்.
எனவே மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக் கீட்டு முறையை அமலாக்கிட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி குரல் எழுப்புவோம்.
நீதித்துறையை பயன்படுத்தி தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முயல்கின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாகும்.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு கொள்கையில் ஊறு விளைவிக்கும் வகையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பினை வெளியிட்டனர். இதனை புதுச்சேரியில் நடைமுறைப் படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் அரசை அப்பொழுதே வலியுறுத்தி னோம். நமது வலுவான எதிர்ப்பின் காரணமாக காங்கிரஸ் அரசு சென்டாக்கில் மட்டுமே நிறுத்தி வைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற சான்றிதழ் அளிப்பதை நிறுத்தி வைக்க வருவாய்துறைக்கு உத்தர விட்டுள்ளது போல புதுச்சேரி அரசும் உத்தரவிட வேண்டும். இனி வரும் காலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்தமாட் டோம் என்ற கொள்கை அறிவிப்பாக புதுச்சேரி அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம்.
புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினவர்களுக்கு தற்சமயம் இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தமிழகத்தை போல் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை எழுப்பி வருகின்றோம். 1994இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.விசுவநாதன் புதுச்சேரி சட்டமன்றத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான தனி நபர் சட்ட முன் வரைவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆலோசனையின் அடிப்படையில் தாக்கல் செய்தார். அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எனவே புதுச்சேரி அரசு எதிர் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங் குவதற்கான சட்ட மசோதா வினை நிறைவேற்றி குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
No comments:
Post a Comment