ஏட்டுத் திக்குகளிலிருந்து.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:                     



  • எல்லைப் பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள பதட்டத் தைத் தணிக்கும் வகையில் லடாக்கில் உள்ள பாங்கோன் சோ ஏரி பகுதியில் இந்தியா - சீனா இருதரப்பும் தங்கள் ராணுவத்தை திரும்ப அழைத்துக் கொண்டன.

  • கேரளாவில் கோயில்களைத் திறக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • மத்திய அரசின் திட்டங்கள், கிராமப்புற வேலைவாய்ப்பை பெருமளவு அதிகரிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியபடி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவது சரியானதாக இருக்கும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • உலக அளவில் கரோனா தொற்று வரும் காலங்களின் இன்னமும் அதிகரிக்கும் என உலக சுகாதாரத் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார்.

  • காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள ஜோதிராவ் சிந்தியா, அவரது தாயார் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, புதுடில்லியில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


தி இந்து, டில்லி பதிப்பு


கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது, சமூகத் தொற்றை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என இந்து தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:


கரோனா சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உறுப் பினர்கள் நேரடியாக பங்கேற்றிடும் சாத்தியக்கூறை ஆராய்ந்து தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு மக்களவை மற்றும் மாநிலங் களவைத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:                                                           



  • இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அய்.அய்.டி. போன்றவை, உலகத்தரத்தில் பின்னுக்குச் சென்றுள்ளதாக, பன்னாட்டுப் பல்கலைக்கழகங் களைத் தரவரிசைப்படுத்தும் அமைப்பு கூறியுள்ளது. இந்தியா வில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது முதன்மைக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

  • தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள் அனைத்தும் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூன் 15-ஆம் தேதி நடத்தவிருந்த தேர்வை தமிழ் நாடு அரசு ரத்து செய்து அனைத்து மாணவர் களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசும் தேர்வை ரத்து செய்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளது.

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய நிகழ்வை தவறாக செய்தி ஒளிபரப்பிய் ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மும்பை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பசுவதைத் தடுப்புக்கான அவசரச் சட்டத்தை உ.பி. அரசின் அமைச்சர் குழு ஏற்றுக் கொண்டது. இதன்படி, பசுக் களை ஏற்றி செல்லும் வாகனத்தைப் பறிமுதல் செய்வதோடு, அதற்குரியவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் பத்தாண்டு வரை சிறை என்றும் கூறப்பட்டுள்ளது.

  • கரோனா தொற்று தடுப்புக்காக மோடி அரசால் அமைக்கப் பட்ட ‘பி.எம்.கேர்ஸ்’ எனும் அறக்கட்டளையை, மத்திய தணிக்கைத்துறை தணிக்கை செய்யமுடியாது; மக்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டியதில்லை என்ற மோடி அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி கட்டுரை எழுதி உள்ளார், காங்கிரசின் ஊடகத்துறை தலைவர் ஷாமா முகமது.

  • நியூசிலாந்து நாட்டில் கரோனா முற்றிலுமாக ஒழிக்கப் பட்டதாக அரசு அறிவித்ததுடன், இதுவரை இருந்து வந்த கட்டுப்பாடுகளையும் விலக்கிவிட்டது. இதன் காரணமாக, மக்கள் ஒருவரை கட்டித் தழுவிக் கொண்டனர். வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகளில் மக்கள் கூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


- குடந்தை கருணா,


10.6.2020


No comments:

Post a Comment