சென்னை,ஜூன்16 அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற் றால் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித் தது.
நாடு முழுவதும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. அவர்களில் சிலர் தற்கொலை செய்வது உள்ளிட்ட சில விபரீத சம்பவங் களும் நடந்துள்ளது. இது தமிழகம் முழு வதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாண வர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு தனது ஆய்வை முடித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கடந்த 8ஆம் தேதி சென்னை தலைமைச் செய லகத்தில் சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தனது அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம்'' என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது மாடியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை குறித்தும் விவா திக்கப்பட்டது. பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் மாண வர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் தற் போது தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஓரிரு நாளில் தமிழக அமைச் சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து, அவசர சட்டம் பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது. அவசர சட்டம்மூலம் தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி, நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படுவதன்மூலம் அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாண வர்கள் கூடுதல் எண்ணிக்கையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment