ஒற்றைப் பத்தி - ‘கரோனா' கடவுளே நமஹ!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

ஒற்றைப் பத்தி - ‘கரோனா' கடவுளே நமஹ!'


‘‘கடவுள்கள் தானாக தோன்றியவையல்ல- அதைக்  கண்டுபிடித்தவனை முட்டாள்'' என்றார் தந்தை பெரியார்.


‘‘அதனைப் பயன்படுத்தி சுரண்டல் தொழிலுக்குக் கரு வியாக்கியவன் அயோக் கியன். கடவுள் தானாகத் தோன்றியது என்றால், ஏன் எல்லோருக்கும் தோன்ற வில்லை?'' என்று அடுத்த வினாவைத் தொடுத்தார் வெண்தாடி வேந்தர் பெரியார்.


மனிதனால்தான் கடவுள் உருவாக்கப்பட்டான் என்ப தற்கு வெகுதூரம் சென்று ஆராய்ச்சிக் கடலைக் கடையவேண்டியதில்லை. நம் கண்முன்னே நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதைப் பாரபட்சமற்ற கண்கொண்டு பார்த்தாலே பளிச்சென்று தெரிந்துவிடும்.


ஈரோட்டிலே காந்தி யாருக்குக் கோவில் கட்ட வில்லையா?


காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குக் கோவில் கட்டவில்லையா?


‘‘காந்தி என்ற அரக் கனைக் கொல்ல மகா விஷ்ணு எடுத்த அவதாரம் தான் கோட்சே'' என்று குறிப்பிடும் ‘‘மை நாதுராம் கோட்சே போல்தா'' எனும் நாடகத்தை வாஜ்பேயி பிரதமராக இருந்த கால கட்டத்தில் சங் பரிவார் டில்லி, மும்பை போன்ற நக ரங்களில் அரங்கேற்றவில் லையா?


அதுபோல்தான் கேரளா வில் கடக்கல் என்ற இடத் தில் அனிலன் என்பவர் கரோனாவுக்குக் காரண மான கோவிட் - 19 வைர சுக்குச் சிலை அமைத்துக் கோவிலையும் எழுப்பி விட்டார். அந்தக் கட வுளுக்குக் ‘கரோனா தேவி' என்றும் பெயர் சூட்டி விட்டார்.


கரோனா இப்பொழுது கடவுளாகிவிட்டதால் - அதனை ஒழிப்பது என்பது கடவுளை ஒழிப்பதாகி விடுமே!


அதை ஒழிப்பதற்குப் பதிலாக ‘‘கரோனா தேவி'' கோவிலுக்குச் சென்று அல் லது ஒவ்வொரு ஊரிலும் கிளைக் கோவில்களையும் எழுப்பி (தலபுராணங்களை யும் எழுதி) உண்டியலும் வைத்து (அதுதான் மிகமிக முக்கியம்) நேர்த்திக் கடன் களைக் கழித்தால் கோவிட் 19 ‘கோவிந்தா, கோவிந்தா' என்று ஓடிவிடுமே! செய் வார்களோ!


ஆம் என்க!


 - மயிலாடன்


No comments:

Post a Comment