எடியூரப்பா கரோனா தொற்று காலத்தில் மூடப்பட்டிருந்த கோவில்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டார். இந்தக் கோவில்கள் அனைத்தும் தூய்மைப்பணி முடிந்து திங்களன்று அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு யாகம் ஒன்றில் எடியூரப்பா தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்துகொண்டார். அப்போது சமூக விலகல் எதுவுமே கடைப்பிடிக்கப்படவில்லை. முக்கியமாக பார்ப்பன அர்ச்சகர்கள் யாருமே முகக்கவசம் அணிந்திருக்க வில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நாடெங்கிலும் அபராதம் விதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது கருநாடகா மட்டுமல்லாமல் நாட்டில் பல கோவில்களில் பூஜைசெய்து பிழைக்கும் பார்ப்பனர்கள் யாரும் முகக்கவசம் அணியாமலேயே பொது இடங்களில் உலவுகின்றனர். ஒரு வேளை பார்ப்பனர்களுக்கு மட்டும் முகக்கவசம் அணிவதிலிருந்து விதிவிலக்கு கொடுத்துவிட்டார்களோ???
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment