'விடுதலை' ஏடு - 86 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

'விடுதலை' ஏடு - 86

பேராசிரியர்.மு.நாகநாதன்


தந்தை பெரியார் மாபெரும் ஏட்டாளர். குடிஅரசுத் தொடங்கி,  தமிழகத்திற்கு  விடுதலையை வழங்கிய பெரும் ஊடகச் சிற்பி பெரியார்.  தமிழ்நாட்டின் அச்சு ஊட கத்துறை வரலாற்றில்  தனித்த பாங்கும், பங்கும் பீடும் பெருமையும், 'விடுதலை' ஏட்டிற்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது.


பகுத்தறிவு, சமத்துவம், பொதுஉடைமை கருத்துகளைக் கடந்த 86 ஆண்டுகளாக வழங்கி 'விடுதலை' படைத்துள்ள மலை யளவு சாதனைகள் எத்தனை! எத்தனை!!


ஒரு பக்கத்தில் ஆன்மீகம், மற்றொரு பக்கத்தில் சோதிடம், திடுக்கிடும் தலைப்பு கள், கொலை, கற்பழிப்பு, நடிகர் நடிகை களின் அந்தப்புற நிகழ்வுகள், கள்ளக் காதல், சாமியார்கள் செய்யும் அற்புதங்கள், திருவிளையாடல்கள் போன்ற தகவல்க ளைத் தந்து, சாலைகளில் வழியும் சாக்கடை கழிவு நீர் போன்ற நிலையில்  செய்திகள் வரும்  நிலையில் ஏடுகள்  இருக்கும் போது, தமிழர்களின் அறிவு ஓடையாக,


புரட்சி கவிஞர் திண்ணிய எண்ணத்திற்கு-


" உயர் தமிழ்நாடு விடுதலை வாழ்வு பெற" ஓடி வரும் வெள்ளமாக அல்லவா 'விடுதலை' ஏடு நாளும் விரிகிறது.


திராவிடர் இயக்கம் தந்த பேரறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி போன்ற சிறந்த பகுத்தறிவு போராளிகளை ஆசிரியர் களாகப் பெற்ற பெருமை விடுதலைக்கே உரித்தானது.


இப்படி ஊடக வரலாற்றில் பகுத்தறிவு வான் ஊர்தியாக வலம் வரும் விடுதலை ஏட்டில் ஆசிரியராக நமது ஆசிரியர் வீர மணியார் 56 ஆண்டுகளாகத் தொடர்கிறார் என்று எண்ணும்போது வியந்து நிற்கிறேன்.


1955 ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட் டையில் எங்கள் குடியிருப்பு  விடுதலை அலுவலகம்  அருகில் அமைந்ததால் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரை விடுதலையைப் படிக்காத நாள் இல்லை.


அறிவுக்கும் அறிவியலுக்கும் முன் உரிமை அளித்து கடந்த 56 ஆண்டுகளாகப் பெரியாரின் கொள்கை வாளாக, பகுத்தறிவு சிந்தனையின் அடையாளமாக சமூக நீதியைப் பாதுகாக்கும் வீரனாக விடுதலை ஆசிரியராக வீரமணியார் தொய்வில்லாமல் வழங்கி வரும் கருத்துரைகள், கட்டுரைகள், வாழ்வியல் சிந்தனைகள், கேள்வி பதில்கள் திராவிட இயக்கத்தின் கருத்துக் கருவூலங் கள் அல்லவா!


விடுதலையின் பயணத்தையும், ஆசிரியர் வீரமணியாரின் இதழில் தொண்டறத்தை யும் எண்ணி,எண்ணி மகிழ்கிறேன் நெகிழ் கிறேன். படிக்கிறேன். பயன் பெறுகிறேன்.


வெல்லட்டும் விடுதலை! தொடரட்டும் ஆசிரியர் வீரமணியாரின் பணிகள்!!


வெல்க பெரியார் இயல்!!!


No comments:

Post a Comment