மதுரை, ஜூன் 12 மதுரை மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை விளைச்சல் விழா 03.-06.-2020 ஞாயிற் றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் காணொலி வழியாக நடைபெற்றது.
மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா தலைமை வகித்து உரையாற்றினார், விருதுநகர் மாவட் டத் தலைவர் இல.திருப்பதி வர வேற்று உரையாற்றினார்.
அமைப்பு செயலாளர் வே.செல்வம், எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எரி மலை, விருதுநகர் மாவட்டச் செய லாளர் விடுதலை ஆதவன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.
கூட்டத்தின் நோக்கம் பற்றியும், விடுதலை விளைச்சல் விழாவின் சார் பாக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் சந்திரசேகரன் அவர்கள் தனது சார்பாகவும், தனது மாமியார் சார்பாகவும் ரூ 20,000 நன்கொடை வழங்கியதையும், போடி இரகுநாகநாதன் அவர்கள் தமிழர் தலைவர் அவர்களிடம் விடுதலைக்கு ஏற்படும் நட்டம் பற்றி வினா எழுப்பி யதையும் குறிப்பிட்டு, தோழர்கள் இந்தக் கரோனா காலத்தில் விடுதலை சிறப்பாக வெளிவந்து கொண்டிருக் கிறது,அதற்கு விடுதலை வளர்ச்சி நிதியை தாராளமாக வழங்க வேண் டும், இது கட்டாயமில்லை, ஆனால் கொடுக்கக்கூடிய தோழர்கள் இந்தக் கூட்டத்திலே அறிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் அவர்கள் உரையாற் றினார்.
நவ பாரத் நாராயண ராஜா
தொடர்ந்து ம.தி.மு.க வெளியீட்டு செயலாளர் நவபாரத் நாராயண ராஜா அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்கள்.அவர் தனது உரை யில் 'விடுதலை விளைச்சல் விழாவில் தான் கலந்துகொண்டு உரையாற் றுவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் ,தான் அரசியல் கட்சியினைச்சார்ந் தவன் என்றாலும் தேர்தல் அரசியல் இல்லாமல் , சமூகத்திற்கு தொண்டு செய்வதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டு, தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை, அரசியல் கட்சிகளில் இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றிய காணொலி நிகழ்ச்சி யில் கலந்து கொண்டதையும், தமிழர் தலைவர்களிடம் கலந்து உரையாடி யதையும் குறிப்பிட்டார். உலகத்தில் உள்ள முன்னணி பல்கலைக் கழகங் களில் எல்லாம் தந்தை பெரியாரின் புத்தகங்கள் இருப்பதற்கான வழி களைச் செய்ய வேண்டும் என்று தமிழர் தலைவரிடம் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிட்டார். தான் பெரியார் நூல்களை வாங்கி பல்வேறு இடங்களுக்கு கொடுத்திருப்பதைக் குறிப்பிட்டார். தான் ஒரு கல்வியாளர் என்ற முறையில் பல்கலைக் கழகங் களில், கல்வி நிறுவனங்களில் தந்தை பெரியாரின் கொள்கை பரவுவதற்கும், பெரியாரியல் நூல்கள் இடம் பெறுவ தற்கும் துணை புரிவேன் என்று குறிப்பிட்டார். நாள்தோறும் 'விடு தலை'யைப் படிப்பதாகவும், தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள், ஊசி மிளகாய் பகுதி, கவிஞர் அவர் களின் கட்டுரை எல்லாம் மிகவும் தன்னை ஈர்க்கும் பகுதி என்று குறிப் பிட்டார். ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வை.கோ. அவர்களின் தலைமையில் பணியாற்றுகிறோம் ,அவரின் கட்டளைப்படி பணியாற் றுகிறோம், திராவிடச் சித்தாந்தங்கள் பரவவும், நிலைத்திருக்கவும் விடுதலை ஒரு மிகப்பெரிய போர்க்கருவி, அதற்கு எந்த நாளும் துணை நிற் போம்,தன்னுடைய பங்களிப்பாக உடனடியாக ரூ 10,000 அடுத்து சில நாட்களில் ரூ 15,000 என மொத்தம் ரூ 25,000 நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.திராவிடர் கழகத்தின் விருதுநகர் மாவட்டத்தலைவர் திருப் பதி அவர்களின் தோழமைக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டு உரையாற் றினார்.
கவிஞர் கலி. பூங்குன்றன்
தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றி னார். அவர் தனது உரையில்: விடு தலையின் விளைச்சல் என்ற தலைப் பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.விடுதலையின் வளர்ச்சிக்காக ம.தி.மு. க.வின் வெளியீட்டு செயலாளர் நவபாரத் நாராயணராஜா அவர்கள் ரூ 25,000 நன் கொடையை அறிவித்திருக்கின்றார்கள். மிக்க நன்றி. அதனைப்போல ஏராளமான தோழர்கள் தங்கள் பங்களிப்பை அறிவித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.விடுதலை தொடர்ந்து நடை பெறுவதற்கு இவையெல்லாம் தேவை. விடுதலை என்பது 1935-இல் தொடங்கப்பட்ட பத்திரிக்கை என விடுதலையின் வரலாற்றைக் குறிப் பிட்டு, விடுதலை சந்தித்த வழக்குகள், விடுதலை சந்தித்த சவால்கள், விடுதலைக்கு முழு நேரமாகப் பணியாற்ற வருகின்றேன் என்று சொன்னதால் தந்தை பெரியார் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி, தந்தை பெரியார் பிறந்த நாள் மலர்களின் சிறப்பு, குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஆசிரியராக இருந்த பொழுது ஒரே ஒரு முறை தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் மலர் வந்தது ,பிறகு வரவில்லை, 1958-இல் இருந்து ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஓர் ஆண்டு கூட விடுதலையின் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர், 1962-இல் அரசுப் பணியில் இருந்தபொழுதே தான் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து சென்னையில் தந்தை பெரி யாரின் பிறந்த நாள் மலர் வெளி வருதற்காக உழைத்தது,நெருக்கடி காலத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் விடுதலை ஆசிரியராக இருந்தபொழுது, பார்ப்பன அதி காரிகள் கொடுத்த தொல்லை, அதனை சமாளித்த விதம், பின்பு தான் பொறுப்பு ஆசிரியராக விடு தலையில் இருப்பது, உலகத்திலேயே ஒரே நாத்திக நாளேடான விடு தலையின் சிறப்பு, அதற்கு 58 ஆண்டு களாக தொடர்ந்து ஆசிரியராக இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு, 'விடுதலை' வீட்டில் இருப்பதே தமிழர் வீடு என்பதற்கான அடையாளம் எனக் குன்றக்குடி அடிகளார் குறிப்பிட்டது எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல் களை சுவையாகவும், கோர்வை யாகவும் குறிப்பிட்டு தோழர்களின் மத்தியிலே விடுதலை பற்றி ஓர் உணர்ச்சியூட்டும் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் தேனி மாவட்டத் தலைவர் போடி ரெகுநாகநாதன், மண்டல தலைவர் கருப்புச் சட்டை நாகராசன், மாவட்ட ப.க தலைவர் மன்னர்மன்னன், மதுரை போட்டோ ராதா, சுப்பையா, இராசபாளையம் நகரத் தலைவர் பூ.சிவக்குமார், நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன், ஆகியோர் உரையாற்றினார்கள்.மதுரை மண்டல செயலாளர் முரு கேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அண்ணா ரவி, உரத்த நாடு உத்திராபதி, நா.அன்பரசு, காரைக்குடி பழனிவேலு, சுப்பையன், அறந்தாங்கி வீரய்யா, விழுப்புரம் சதீஸ், ஆத்தூர் செல்வம், ஆட்டோ செல்வம், தங்கராசு, விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் முரளி, அன்புச்செல்வன், வாழப்பாடி வேல் முருகன், திருவெறும்பூர் மாரியப்பன், தஞ்சை வி. குணசேகரன், சிதம்பரம், பிரான்ஸ் தங்க. ரமேஷ் மதுரை சுரேஷ், போடி சுருளி, விருத்தாசலம் வேங்கடராசா, மதுரை தமிழ் ஓவியா மாரிமுத்து, ரெகுநாதன் செந்தில், தஞ்சை ந.காமராசு, மதுரை காளியப்பன்,
செல்லத்துரை, திருவெறும்பூர் ஆண்டிராஜ், சண்முகசுந்தரம், ஆண் டிப்பட்டி ஸ்டார் நாகராஜ் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment