டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாகவும், நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் சில சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு ஈர்த்திட எல்லாவித ஏற்பாடுகளையும் செய்வதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் நாள் வரை பாதுகாப்பான விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- இட ஒதுக்கீட்டை சிறிது சிறிதாக குறைத்திடவும், பொருளாதார அளவுகோலைப் புகுத்திடவும் அரசு திட்டமிடுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று கூறுவதன்மூலம் உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த தத்துவத்தை மீறியுள்ளது என லோக் ஜன்சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் காலிக் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காததை முன்னிட்டு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை எனக் கூறி, உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தியுள்ளது.
தி இந்து, டில்லி பதிப்பு:
- இன்றைய நாளில், காந்திகளும், மண்டேலாக்களும், மார்ட்டின் லூதர் கிங்குகளும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள கோபால் கிருஷ்ண காந்தி, நிறவெறி, வகுப்பு பேதம், உயரடுக்கு சிந்தனை இவற்றுக்கு எதிராக மக்கள் பேசுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- ஜோஸ்யர் தேஜன் தாருவாலா மறைவுக்கு, எதிர்காலத்தை நிர்ணயித்த மனிதன் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கத்திற்கு மறுப்பாக, மகாராட்டிரா அந்த்சிரத்தா நிர்முலன் சமிதி (மான்ஸ்) அமைப்பின் உறுப்பினர் ஹமீத் தபோல்கர் கட்டுரை எழுதி யுள்ளார்.
- நிறவெறி என்பது தனிமனித விஷயமல்ல; அது ஒரு நிறுவனம், அமைப்பு. அனைவரும் சேர்ந்து அதனை அடித்து நொறுக்க வேண்டும் என மேற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங், அமைதியைக் கலைப்போம் என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபரிமலைக் கோயில் திறப்பதை, கேரள அரசு தள்ளிவைத்துள்ளது.
எகனாமிக் டைம்ஸ், மும்பை பதிப்பு:
- பீகார் தேர்தல் பரப்புரையில் காணொலி வழியே 75 கூட்டங்களை நடத்திட பாஜக முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில தலைவர்களிடம் அதிகாரம் உள்ளதைக் குறைத்திடும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் பூபேந்திர் யாதவ் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா,
12.6.2020
No comments:
Post a Comment