இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா சொல்வதை வரவேற்கிறோம்!
பீகார் தேர்தலுக்காக சொல்லப்பட்டதாக இருக்கக் கூடாது!
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதுபோல
இட ஒதுக்கீட்டுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என்று பா.ஜ.க.வின் தேசிய தலை வர் ஜே.பி.நட்டா சொன்னதை வரவேற் றும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதுபோல, அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இந்திய அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையின்கீழ் கொண்டுவர மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பல நூற்றாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமையாகும்!
சமூகநீதி - இட ஒதுக்கீடு என்பது, நாட்டின் பெரும்பான்மையான 80 சதவிகித மக்களைப் பாதுகாத்து முன்னேறிடச் செய்ய நமது பழம் பெரும் தலைவர்கள் - ஜோதி பாபூலே, சாகு மகராஜ், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திராவிடர் இயக்கம் - கருநாடகத்தில் சமூகநீதி இயக்கங்கள் போன்றவை பல நூற்றாண்டு களாகப் போராடிப் பெற்ற உரிமையாகும்.
உலகத்திலே பெரும்பாலான மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சாஸ்திரங்களும், மதமும் நம் நாட்டில் மட்டும்தான் உண்டு.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட எப்படி உதவிக்கான கருவிகள் (Crutches) போன்றவை தேவையோ அதுபோலத்தான் கல்வி, உத்தி யோக வாய்ப்புகளில் முன்னுரிமை, இட ஒதுக் கீட்டு உரிமை, சமூக நீதி ஆகியவை ஒடுக்கப் பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் ஆகியவர்களுக்குத் தேவை என்பதை உணர்ந்தே இந்திய அரசமைப்புச் சட்ட கர்த் தாக்கள் இதனை அடிப்படை உரிமைகள் அத் தியாயமான பகுதி மிமிமி இல் இடம்பெறச் செய்தனர். அதில் கல்வி உரிமைக்கான பிரிவு தொடக்கத்தில் இல்லாத குறை - தந்தை பெரியாரின் போராட்டம் (1950) காரணமாக, பண்டித ஜவகர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் முறையே மத்தியில் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் (1951) இருந்தபோது நிறைவேற்றினர். அதே வழியில் பின்னாளில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீதிபதிகள் கூறியது,
அதிர்ச்சியும், வேதனையும் தருவதாகும்!
இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமையைக் கூட புறந்தள்ளி கடந்த 3 ஆண்டுகளாக - மருத்துவக் கல்வி சேர்க்கையில் - வெறும் பூஜ்ய இட ஒதுக்கீடே வந்துள்ள சமூக அநீதியை, திராவிடர் கழகம் சுட்டிக்காட்டிட, பெரியாரின் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழி - ஒளி பாய்ச்சி, இது சம்பந்தமாக நீதி கேட்டு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முதல் அனைத்து முக்கிய கட்சிகளும் சட்டப் பரிகாரம் தேட உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், நேற்று முன்தினம், உயர்நீதிமன்றத்திற்கே செல் லுங்கள் என்றும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்றும் சில நீதிபதிகள் கூறியது, அதிர்ச்சியும், வேதனையும் தருவதாகும்.
இப்போது பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வருகிறது; அங்கே சமூகநீதி உணர்வு ஓரளவு எழுச்சி பெற்றுள்ளது. அதற்குக் கர்ப்பூரி தாக்கூர் தொடங்கி, லாலு பிரசாத் வரை முக்கிய காரணமாகும். மண்டல் அவர்களே பீகாரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா
நேற்று பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ‘‘பா.ஜ.க. இட ஒதுக்கீடு கொள் கையை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சி. எங்களுக்கு சமூகநீதி வேண்டும் என்பதில் உறுதியான கருத்து உண்டு'' என்று கூறியுள்ளார். இன்று ஏடுகளிலும் அந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலின்போது பீகாரில் முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் இட ஒதுக்கீடு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று பேசி, அது கடும் எதிர்ப்பை உருவாக்கவே, உடனே பின்வாங்கி, பிளேட்டைத் திருப்பிப் போட்டார்; இட ஒதுக்கீடு தேவைதான் என்று குரலை மாற்றினார். அதுபோன்று நட்டாவின் ‘‘உறுதி'' அமைந்துவிடக் கூடாது என்றால், அதற்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவக் கல் லூரி சேர்க்கையில் இழைக்கப்பட்ட பச்சை அநீதியைக் களைய உடனடியாக மத்திய அரசுடன், குறிப்பாக பிரதமர் மோடியுடன் பேசி, இழந்த இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அளிக்க அவசரச் சட்டம் போன்ற ஏற்பாடுகளைச் செய்ய வற்புறுத்தலாமே, அதைவிட்டு, ‘‘வாயில் வடை சுடுவது'' என்ற வழமைக்கு இடந்தரும் கதையாகி விடக்கூடாது - அவரது இந்தத் தேர்தல் உரை!
ராம்விலாஸ் பஸ்வானின் கருத்து வரவேற்கத்தக்கது!
மத்தியில் உள்ள தேசிய முன்னணி அரசில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய நண்பர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் எல்லா இட ஒதுக்கீடு சட்டங்களையும் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பின்கீழ் கொண்டுவர வேண்டும் (சட்டத் திருத்தம் தேவை) என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்த வகையில் தமிழ்நாடு 69 சதவிகித ஒதுக்கீடு அத்தகைய சட்டத்தின்மூலம் வழிகாட்டியுள்ளது!
பஸ்வானைப் பொறுத்தவரையில் அவர் பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீடு - சமூக நீதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முதுபெரும் தலைவர். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கைகளில் மிகவும் மாறாத பற்றுறுதி உள்ளவர். மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த அவர் தன் விவா தத்தை அந்நாளில் நாடாளுமன்றத்தில் முதலில் தொடங்கி வைத்தவரும் கூட; மூத்த அமைச் சரான அவரது கருத்துப்படி, உண்மையிலேயே பா.ஜ.க.வுக்கு சமூகநீதியில் கவலையும், அக் கறையும், ஈடுபாடும் இருக்குமானால், அது போன்ற செயல்கள்மூலம் நாட்டோருக்கு நிரூ பிக்க முன்வரவேண்டும் - தன்னை ‘‘பிற் படுத்தப்பட்டவர்'' என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
பயன்பெறக் கூடிய பிள்ளைகள் -
‘‘எல்லாக் கட்சி'' பிள்ளைகளும்தான்
முதலில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக, அவசரமாக உரிய பரிகார நடவடிக்கையை எடுத்து, நாட்டு மக் களின் - சமூகநீதிக் கோரிக்கைகளை நிறை வேற்ற முன்வரட்டும். அதனால் பயன்பெறக் கூடிய பிள்ளைகள் - ‘‘எல்லாக் கட்சி'' பிள்ளை களும்தான் என்பதை பா.ஜ.க.வினர் உள்பட எவரும் மறந்துவிடக் கூடாது!
இட ஒதுக்கீடுக்கு நாட்டில் - பார்ப்பனர்களைத் தவிர எந்த எதிர்ப்பாளர்களும் இல்லை
பா.ஜ.க. ஆதரித்ததன்மூலம் - இட ஒதுக் கீடுக்கு நாட்டில் - பார்ப்பனர்களைத் தவிர எந்த எதிர்ப்பாளர்களும் இல்லை, இல்லவே இல்லை என்பது புரிந்துவிட்டது. ஜனநாயகப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பம், உரிமை நிறைவேற்றப்பட வேண்டாமா?
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
13.6.2020
No comments:
Post a Comment