பிஜேபியின் கவனம் பீகார் தேர்தலே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 10, 2020

பிஜேபியின் கவனம் பீகார் தேர்தலே!

விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  பாஜக தொடங்கி உள்ளது.  இதை பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.


உச்சநீதிமன்றத்தில் புலம்பெயர்வு தொழிலாளர்கள் இரயில் பயணம் செய்யத்தேவையான நிதி மத்திய அரசிடம் இல்லை என்றும், மாநில அரசின் பங்கில்தான் புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தனர்.


ஆனால் இந்த கரோனா காலத்திலும் தேர் தல் பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக சத்தியப் பேரணி (விருட்சுவல் ரேலி) என்ற பெயரில்  இணையவழி பிரச் சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்காக பீகாரின் பல்வேறு இடங்களில் ஒருலட்சம் பிரமாண்ட எல்.ஈ.டி.   எனப்படும் பெரிய மின்னணுத் திரைகள் அமைக்கப்பட்டன. அனைத் திற்கும் அதிநவீன இணைய இணைப்பு வேகமாக வழங்கப்பட்டது. இதற்கான தொகை குறைந்த பட்சம் ரூ.200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். பீகார் முழுவதும் முக்கிய இடங்களில் இவ்வாறு பெரிய எல்.ஈ.டி. திரைகள் அமைக்க மூன்று தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கொடுக்கப்பட்டன.


 இந்த எல்.ஈ.டி திரைகள் தேர்தல் வரை அங்கேயே இருக்கும் என்றும், கரோனா காரணமாக நேரடிப் பிரச்சாரம் சாத்தியமாகாத பட்சத்தில் இந்த எல்.ஈ.டி. திரைகள் மூலமே மோடி - அமித்ஷா மற்றும் இதர பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என் றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று திரைகள் இலட் சக்கணக்கில் பீகாரின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பீகார் பாஜக பிரமுகர்கள் கூறியுள்ளனர். இதற்கான செலவும் ஆயிரம் கோடி வரை ஆகும் என்று கூறுகின்றனர்.


கடந்த ஜனவரி மாதம் உலகெங்கும் பரவிய கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் முழுமையான ஊரடங்கு நிலவியது. இந்த ஊரடங்கின் போது உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு திட்டங்களை வகுத்து கரோனாவிலிருந்து தங்களுடைய மக்களை பாதுகாத்துக் கொண்டனர். அதே வேளையில் இந்தியாவில் ஊரடங்கு மே 18-ஆம் தேதிக்குப் பிறகு மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று அபாயகரமான அளவு அதிகரித்து வருகிறது. ஒரு இலட்சம் கரோனா தொற்று நோயாளிகள் உருவாக 4 மாதங்கள் ஆயின.


 ஆனால் தற்போது 10 நாட்களில் தொற்று ஒரு இலட்சத்தைத் தாண்டுகிறது அதே போல் மரணமும் ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.  இந்தியாவில் இந்தவார இறுதியில்  3 முதல் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப் படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.  உயிரிழப்பின் வேகத்தைப் பார்த்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


அனைத்துக் கட்சிகளும் மத்திய பாஜக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளன.   ஆனால் ஆளும் பாஜக தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது.  புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கூறிய மத்திய பாஜக அரசு தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆயிரம் கோடிகளை வாரி இறைக்க முடிவு செய்துள்ளது.  தற்போது பீகார் மாநிலத்தில் பாஜக பங்கு பெற்றுள்ள கூட்டணியே ஆட்சி நடத்தி வருகிறது.


இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.


"பீகாரில் பிஜேபி கூட்டணி ஒருவர்மீது ஒருவர் அவநம்பிக்கைக் கொண்ட கூட்டணியாக மாறி விட்டது. ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பின் பீகார் மக்களும் தங்களுக்கு எதிராக உள்ளனர் என்பதைப் பிஜேபி தலைமை புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் எதிர்க்கட்சிகளின் மனவலிமையைக் குலைக்க ரூபாய் 150 கோடி செலவில் ஆன்லைன் பொதுக் கூட்டத்தை பிஜேபி நடத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


கரோனா கடுமையாகத் தொற்றிய கால கட்டத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபடும் பிஜேபியின் மதவாத அரசியல் - அதிகாரம் கரோனாவைவிட ஆபத் தானதே!


No comments:

Post a Comment