தாழ்த்தப்பட்டோரை தாழ்வாகக் கருதும் சூத்திரர்களுக்கு....
ஒரு மனிதனைப் பார்த்தால், அவனுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது உங்கள் மனதில் உதிக்கவேண்டும். சுயமரியாதையில் கவன மில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும், உயரமாட் டார்கள். அவனவனுக்கே, தான் மனிதன் என்ற உணர்ச்சி வரவேண்டும். நீங்களாகவே பதுங்குவ தும், ஒதுங்குவதுமான துர்க் குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அப்போதுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.'' (‘குடிஅரசு', 25.4.1926).
‘‘மாட்டுக்கறி சாப்பிடும் வெள்ளைக்காரனை ‘உயர்ஜாதிக்காரனாக'க் கருதிக் கொள்ளும் பார்ப் பானே ‘துரை' என்று அழைக்கும்போது, அதே மாட்டுக் கறி சாப்பிடுதல் மட்டும் எப்படி உங்களை கீழ்ஜாதியாக, தொடக்கூடாத ஜாதியாகக் கருதிட வைக்கும்? இது வேடிக்கையான முரண்பாடு அல் லவா?'' - கேட்கிறார் தந்தை பெரியார்!
‘‘உங்கள் இழிவுக்குக் காரணம் உங்களுக்கு மானம், சுயமரியாதை உணர்ச்சி ஏற்படாததுதானே யொழிய வேறில்லை. ஆகையால், நீங்கள் மற்றவர் களைப்போல், மனிதர்கள்தான் என்று எண்ணிக் கொண்டு, அதற்கேற்ற விதமாக நடந்துகொள்ளத் துணிவு கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் கஷ்டங் களைச் சகிக்கத் தைரியம் கொள்ளுங்கள்.'' (‘குடி அரசு', 16.6.1929).
‘‘தீண்டாமை என்பது ஏணி மரப்படிப் போல் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பீடித்திருக் கிறது. பார்ப்பனீயம் தொடர்ந்து நீடிப்பதற்குப் பார்ப்பனரல்லாத சூத்திர ஜாதிகளே காரணம்.
‘அட, சூத்திர நாலாஞ்ஜாதியினரே!'
அவர்களை கீழான ஜாதி என்று கருதி நடத்தும் சூத்திர நாலாஞ் ஜாதியினரை நான் கேட்கிறேன், அவனையாவது ‘‘பஞ்சம ஜாதி'' என்று, அய்ந்தாம் ஜாதி என்றும் கூப்பிடுவதில் உன் பெயர் அளவுக்கு மோசமான இழிவு அந்தப் பெயரில் இல்லை. உன்னை ‘சூத்திரன்' என்றால், பார்ப்பான் வைப் பாட்டி மகன் - தேவடியாள் மகன் என்று அல்லவா பொருள் எழுதி வைத்துக் கூப்பிடுகிறான்? அவ¬ னவிட நீ (பார்ப்பான் - சூத்திரன்) எப்படி ‘‘உயர்ந்த வன் உரிமை கொண்டாட முடியும்?''
‘‘பார்ப்பனரல்லாதாருக்குள்ளும், பற்பல ஜாதி யார் ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டு கின்றனர். மேல்ஜாதியார்களே, நீங்கள் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்க ளெனில், உங்களுக்குக் கீழே உள்ள ஜாதியார்களுக்கு நீங்கள் சமத்துவம் அளிக்கவேண்டும். நம்மிட மிருக்கும் கொடுமை பார்ப்பனர்கள் காட்டும் கொடுமையைவிடச் சற்று அதிகம் என்று சொல்ல வேண்டும்.'' (‘குடிஅரசு', 9.12.19...?).
நாலாஞ் ஜாதியாகிய சூத்திரப் பெருமக்களில்(?) சிலர் திராவிடர் கழகத்தைப் பார்த்து, கிராமப் பகுதிகள் சிலவற்றில் அது பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று பகிரங்கமாய்ப் பேசி தங்கள் ஜாதி ஆணவத்தை, வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டியபோது,
தந்தை பெரியார் அழுத்தந்திருத்தமாகச் சொன் னார்; ‘‘ஆம், அதிலென்ன சந்தேகம்? யார் மிகவும் கீழே அடியில் வதிகிறார்களோ, அவர்களை மேலே கொண்டு வருவதுதானே முதல் வேலையாய் இருக்க வேண்டும். இருக்க முடியும். ஆம்! எங்கள் கட்சி அவர்கள் கட்சிதான் என்பதைப் பெருமை யோடு சொல்லிக் கொள்ளுகிறோம்.
எங்கள் இயக்கம் ஒன்றில்தானே எவருக்கும் ஜாதி அடையாளமே கிடையாத நிலை.
விளக்கமாகத் தந்தை பெரியார் தடம் பதிக்கிறார் - உற்று கவனியுங்கள். உளவியல் பார்வையும், அறிவியல் அணுகுமுறையும் ஒருங்கே கலந்து பதிக் கப்பட்ட தடம் அது!
‘‘சூத்திரர்''களின் விடுதலை என்பது - தாழ்த்தப் பட்டோரின் விடுதலையிலிருந்து பிரிக்க முடியாதது என்று கருதிய தந்தை பெரியார், நாகையில் ஒரு உரையில் மிகவும் தெளிவாக அதைத் தெளிவுபடுத் தினார்.
ஆம், ஜாதியை நாங்கள் ஒன்றாக ஆக்கக் கூடியவர்கள்தான்!
‘‘ஜாதியை நாங்கள் ஒன்றாகக் கருதுகிறோம். ஆம்! ஆக்க முயற்சிக்கின்றோம். அதில் சந்தேக மில்லை. மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்.
நாங்கள் ஆதிதிராவிடர்களைப்பற்றிப் பேசும் போது, பார்ப்பனர்கள் மன வருத்தம் அடைவதில் அர்த்தம் உண்டு; ஆனால், பார்ப்பனரல்லாதார் மன வருத்தம் அடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. ‘பறையன்' பட்டம் போகாமல் உங்களுடைய ‘சூத்திரப் பட்டம்' போய்விடும் என்று கருதுவீர் களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாளாவீர்கள். மற்றும் பேசப் போனால், ‘பறையன்', ‘சக்கிலி' என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்ஜாதி என்பதற்கு இன்னது ஆதாரம் என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
கைபலமே ஒழிய, தந்திரமே ஒழிய வேறில்லை. உங்கள் சூத்திரப் பட்டங்களுக்கு கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையும் நாசமாக்கி, அ டியோடு ஒழிந்தால் அல்லாமல், உங்கள் தலையில் இருக்கும் ‘சூத்திரப் பட்டம்' கீழே இறங்காது! ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந்தால், ‘‘நீங்கள் ஜாதியை ஒன்றாக்குகிறீர்களே'' என்று நம்மைப் பார்த்துக் கேட்டிருக்கமாட்டீர்கள்!
ஆகவே, ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சி களும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் ‘‘பார்ப்பன ரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்!'' (‘குடிஅரசு', 11.10.1931).
‘‘திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் எப்படி தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப் படி திராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்கள் அதை விட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக் கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்திற்கே மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திரா விடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்க ளென்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது.
எல்லோரும் திராவிடர்களாக ஒன்றாவோம்!
ஆகையால், ஆதிதிராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் என்கின்ற பெயரிலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும், திராவிடருக்கும் - ஆதிதிராவிடருக்கும் சமுதாயத் துறையில் உள்ள எல்லா வித்தியாசங்களும், பேதங் களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் என் ஆசை!'' (‘குடிஅரசு', 25.8.1940).
(தொடரும்)
No comments:
Post a Comment