அதிசயங்கள் நிறைந்த அற்புதமான உலகம் இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒருபுறம் ,இயற்கையோடு போட்டிபோட்டு மனிதர்கள் உருவாக்கிய அற்புதங்கள் இன்னொரு புறம்.
60 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் இரண்டு கண்ட திட்டுகள் மோதியதால் உருவான இமய மலையில் ஈஃபிள் டவரின் உயரத்தைப்போல் 27 மடங்கு உயர்ந்து 29,028 அடி உயரம் கொண்ட இயற்கை அதிசயம் எவரெஸ்ட்.
1632 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1648 ஆம்ஆண்டு வரை 16 ஆண்டுகள் 22 ஆயிரம் மனித உழைப்பில் முகலாய மன்னர் ஷாஜகான் அவர்களால் ஆக்ரா நதிக்கரையில் கட்டி முடிக்கப்பட்ட அதி சயம் தாஜ்மஹால்.
கி.மு 2560 ஆம் ஆண்டு நான்காம் பாரோ மன்னரால் 23 லட்சம் கற்களை பயன்படுத்தி ஒரு லட்சம் மனித உழைப் பால் 20 ஆண்டுகளில் ஒவ்வொரு அடிப்பகுதியும் 751 அடி கொண்டு (kufu) மன்னரின் கல்லறை கட்டிமுடிக் கப்பட்ட அதிசயம் பிரமிடு.
கி.பி 206 ஆம் ஆண்டு துவங்கி (15 ஆண்டுகள்) கி.பி 221 ஆம் ஆண்டு வரை 4500 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டு உயர்ந்த மலைகள் மணற் பாலை வனங்கள் பள்ளத்தாக்குகள் பயணம் செய்து கட்டிமுடிக்கப்பட்ட அதிசயம் தான் சீனப்பெருஞ்சுவர். இதைபோல் உலக அதிசயங்கள் இன்னும் ஏராளம் உண்டு.இந்த அதிசயங்களால் மக்களின் மானஉணர்ச்சி, அறிவுப்பசி, மனித உரிமை, சமத்துவம், பெண்ணுரிமை ஆகியன கிடைக்கப்பெற்றுவிட்டனவா? அல்லது இவை கிடைக்க இதனால் ஏதேனும் வழிவகை உண்டா? கட்டி வைக்கப்பட்டது முதல் இதுவரை காட்சி பொருள்தானே? ஒவ்வொரு காலத் திலும் மக்களிடையே உயர்ந்தவன்- தாழ்ந்தவன், வெள்ளையன் - கருப்பன், பணக்காரன் - ஏழை, ஒரு மதம் உயர்ந் தது - ஒரு மதம் தாழ்ந்தது, ஆண் உயந் தவன் - பெண் தாழ்ந்தவள், ஒருவன் உயர் ஜாதி, ஒருவன் தாழ்ந்த ஜாதி, என்ற கோணங்களில் எழுந்த பிரச்சினைகளால் பலகோடி மக்கள் அழிந்துகொண்டிருக் கும் இந்த தருணத்தில் இந்த உலக அதிசயங்கள் சொல்லும் பாடம் என்ன?
எனவே மனித இனம் ஒன்றுபட்டு வாழ்வதற்கும், பஞ்சம், பசி, பிணி இன்றி மகிழ்வதற்கும், ஜாதி மத சண்டைகள் ஒழிவதற்கும், அங்கு இங்கெனாதபடி பரவிக்கிடக்கும் மூடநம்பிக்கையை அகற்ற முயற்சி எடுத்து, பெண்ணுரிமை பெறும் நோக்கில் கத்தியின்றி இரத்த மின்றி பிரச்சாரம் மூலமே வெற்றிகொண் டது எதுவோ அதுதானே உலக அதி சயமாக இருக்க முடியும். அதுதான் தந்தை பெரியார் அவர்களும் அவர் களால் துவக்கப்பட்ட விடுதலையும் ஆகும்.
உலகிலே எவ்வளவோ அறிஞர்கள் மனித ஒற்றுமைக்காகவும் மனித நேயத்தை காக்கவும் பாடுபட்டதாக ஆவணங்கள் உண்டு. அவர்கள் எடுத் துக் கூறிய கருத்துகள் எல்லாம் மதம் அல்லது கடவுள் என்ற மகா தடுப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே அவர் கள் தமது கருத்துகளை நான்கு சுவர் களுக்குள் இருந்து நூலாக வடித்தார்கள். அதிலும் சில தத்துவங்கள் நூலாசிரியார் மறைவிற்கு பின்னர்தான் வெளிச்சத் திற்கே வந்தது.
இந்நிலையில்தான் 141 ஆண்டுக ளுக்கு முன்னர் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவு மேதை தோன்றினார். இந்த உலக அதிசயமான தலைவரால்தான் கடவுள் பயமின்றி, மதபயம் இன்றி, சாஸ்திர சம்பிரதாய பயம் இன்றி, உலக மானுடம் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வழிமுறைகளை சிந்தித்து, வகுத்து, அதற்காக பிரச்சாரம், போராட்டம் நடத் தப்பட்டது. இவரை கண்ட மனுதர்ம வாதிகளும், இதிகாசங்களும் மூடப் பழக்க வழக்கங்களும் பறந்து ஓடின. இவரைப்போன்று மானுட சமுதாயத் திற்காக வெறுப்பு விருப்பின்றி பாடுபட்ட தலைவர்கள் உலக வரலாற்றிலேயே இல்லை.
தம்முடைய கருத்துக்களை வெளிப் படுத்தி மக்களை இழிநிலையிலிருந்து உயர்த்த 1935இல் உருவாக்கிய உலக அதிசயம்தான் 'விடுதலை' என்னும் போர்வாள்.
'விடுதலை'யின் விளைவை 1948இல் தந்தை பெரியார் கண்டு உணர்ந்துஅவர் கருத்தை கீழ்கண்டுள்ளவாறு தெரிவித் துள்ளார்.
'விடுதலை'யில், கடவுள், மதம் பற்றிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவை தோன்ற பிரசுரிக்கப்பட்டுவருவதை மக்கள் படித்து மகிழ்ந்து வருவதோடு அல்லாமல் பல துறைகளில் உணர்ச்சி பெற்று திடுக்கிடும்படியுமான, ஆத்திரப் படும்படியான பல அதிசய கருத்துகளை மனதில் தானாகவே பதிந்துவிடும் படி யான கருத்துகளை புதிதாக கொண்டும் தெளிவுபெற்று வருவதை நான் மனதார உணர்ந்தது இருக்கிறேன், நானே பல சந்தர்ப்பங்களில் எவ்வளவு பயமான கருத்துகளில் ஊறிப்போன பழக்கவழக் கங்களில் பிடிவாதமாக புனிதமானது என்று ஏற்பட்ட தீர்மானங்களில் இவை மகா கொடுமை , முட்டாள்தனம், இழிவு என்று கருத்தும்படியான உணர்ச்சியை சாதாரண மக்களுக்கு விடுதலை ஏற் படுத்தி இருக்கிறது. இது விடுதலையின் உலக அதிசயம் அல்லவா!
ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண் ணடிமையை ஒழிக்க கடந்த 1962 முதல் 58 ஆண்டுகளாக விடுதலை என்னும் போர்வாளை உலகமெல்லாம் சுற்றி சுழன்று வருபவர் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். வீணர்களின் வாலறுக்கும் விடுத லையை யாருக்காகவும் எதற்காகவும் முனைமழுங்க விடாதவர்.
விளம்பரம் இல்லாமலும் கடவுள் தோலுரிப்பு செய்வதில் கடுகளவு பின் வாங்காமலும், மதத்தை மரணிக்க செய்வதிலும், மனுதர்மத்தை வேரறுக்க செய்வதிலும், சமூக நீதியை காக்க சமர் செய்வதிலும், எதற்கும் பின்வாங்காமல் விடுதலையை தூக்கிப்பிடித்து உலக அதிசயத்தில் பாதுகாத்து மானத்தையும் அறிவையும் வழங்கியவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
"தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகளை அவரது சமுதாய சீர்திருத்த கருத்துகளை, மகளிர் முன்னேற்றத்தை, அறிவியல் உணர்வு களை, ஜாதி மத வேறுபாடுகள் அகற்றப் பட வேண்டும் எனும், சமதர்ம சமத்துவச் சிந்தனைகளைப் பரப்புவதில் பெரியார் அவர்களின் மிகச்சிறந்த வழித் தோன் றலாக நேரடி வாரிசாக விளங்குகிறார்" ஆசிரியர் கி.வீரமணி என்று விடுதலை ஆசிரியரை கலைஞர் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி அவர்கள் பாராட்டியுள் ளார்கள்.
உலகத்திலேயே ஒரே தினசரி நாத் திக நாளேடு விடுதலை ஆகும், சாலை குறுக்கே பூனை செல்வது, பசிக்கு பல்லி கத்துவது, இயற்கையாக மரத்தில் பால் வடிவது போன்ற சர்வசாதாரண பிரச்சி னைகளுக்கு பயந்துநடுங்கும் சாமானிய மக்களுக்கு கடவுள், மதம், ஜாதி, சனா தனம், பாலிய விவாஹம், உடன் கட் டையேறுதல், பெண்ணடிமைத்தனம், சுவர்க்கம், நரகம், பிதிர்லோகம், மறு பிறப்பு, இராகுக்காலம், எமகண்டம் இவற்றிலிருந்து மக்களை காப்பதில் இன்றுவரை உலக அதிசயங்கள் பயன் படவில்லை ஆனால் விடுதலைதான் உலக அதிசயமாகி மக்களை காத்து நிற்கிறது.
ஓங்கட்டும் விடுதலை வாசகர் விளைச்சல் பெருவிழா.
உலக அதிசயம் 'விடுதலை' வாழ்க.
குடந்தை.க.குருசாமி,
தஞ்சை மண்டல செயலாளர்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment