டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- இந்திய எல்லைக்குள் வேறு எவரும் நுழையவில்ல; இடங்களை யும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என பிரதமர் மோடி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கூறியுள்ளார். தற்போது சீன ராணுவ அத்துமீறல் காரணமாக, இந்திய ராணுவத்தின் இருபது வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்த கூட்டம் நடைபெற்றது.
- பீகார் மா நிலத்தில் விரைவில் தேர்தல் வரும் நிலையில், காங் கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் மிகப் பெரிய சக்தியாக இல்லாதபோதும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் பாலமாக செயல்பட முடியும் என கட்டுரையாளர் ஆனந்த் கே.சகாய் தெரிவித்துள்ளார்.
- முன்னர் கார்கில், இப்போது லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, இந்த தவறுகள் மீண்டும் எழாமல் விழிப்புணர்வுடன் இந்திய அரசு இருக்க வேண்டும், சுதந்திரத்தைக் காப்பாற்ற நாம் தரும் விலை இதுவே என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- மாநிலங்களவைக்கு 61 இடங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன் கார்கே, திக் விஜய் சிங், அக்கட்சியில் இருந்து பிரிந்து, பாஜகவில் சேர்ந்துள்ள ஜோதிராவ் சிந்தியா, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தி இந்து, சென்னை பதிப்பு
- மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு ஒப்புதல்.
டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு
- மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்..
- குடந்தை கருணா,
20.6.2020
No comments:
Post a Comment