Bejan Daruwala's Official Site
Consult Bejan Daruwalla's Astrologers for Career, Money, Relationship, Business, etc
இந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடராம். இவரைப் பற்றி விளம்பரம் எல்லாம் தடபுடல்தான். அவர் திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?
‘‘மே 15 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் கரோனா ஓடியே போய்விடும். மே 18 ஆம் தேதி இந்தியாவில் கடைசி கரோனா நோயாளி குணமடைவார்'' என்று அடித்துக் கூறினார்.
அந்தோ கொடுமை! அவரே மே 12 ஆம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளாகி தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் மே 18 ஆம் தேதி மும்பையில் உயிர் நீத்த பரிதாப மர ணத்தை என்ன சொல்ல!
இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரி யுமா?
அவர் கோவிட்-19 தொற் றுக்கு ஆளாகி மரணம் அடைந்த பிறகும், அவரைப் பற்றிய பிரமாதமான விளம் பரம் மட்டும் இணைய தளங்களில் ஜோராக வலம் வந்துகொண்டிருக்கிறது!
அவர் இறந்த நிலை யிலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இணைய தளத்தின் வழி பதிவு செய்துள்ளனர் என் பதுதான் நகைச்சுவையின் உச்சம்!
இது இப்படி என்றால், இயற்பியல் விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் என்ன கூறுகிறார்?
21 ஆம் தேதி சூரிய கிரகணத்திற்குப் பிறகு கரோனா ஒழிந்து போய் விடுமாம்!
எப்படி இருக்கு? மூட நம்பிக்கைகளில் எல்லாம் மூத்த முப்பாட்டன் இந்த ஜோதிடமேதான்.
இதில் ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்று கொட்டி அளக்கும் பைத்தியக்காரத் தனத்துக்கும் அளவில்லை.
ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இந்த ஜோதிட மகா புலிகள் பதில் சொல்லட்டும்- மற்றவற்றைப் பிறகு பார்த் துக் கொள்ளலாம்.
நவக்கிரகப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூரியன் நட்சத்திரமா? கிரகமா? இராகு, கேது என்று ஜோதி டத்தில் சொல்லப்படுகிறதே, உண்மையில் இப்படிப்பட்ட கிரகங்கள் உள்ளனவா?
இவற்றிற்குப் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!
- மயிலாடன்
No comments:
Post a Comment