மேற்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

மேற்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம்

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டைப் புறக்கணிப்பதா?



ஈரோடு,ஜூன்17, மேற்கு மண்டல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் ஈரோட் டில் நேற்று (15.6.2020) காலை 11 மணியளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலை மையில்  நடைபெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன்(சேலம்), ஜோதிமணி(கரூர்), சண்முகசுந் தரம் (பொள்ளாச்சி), வேலுச்சாமி (திண்டுக்கல்), நடராஜன் (கோவை), சுப்பராயன் (திருப்பூர்), சின் ராஜ் (நாமக்கல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.


மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு புறக் கணிப்புக்கு மத்தியஅரசுக்கு கண் டனம் தெரிவித்தும்,தொலைக்காட்சி விவாதங்களில் சங் பரிவார அமைப் பினரின் அநாகரிகமான செயல் களைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்திவைத்துள்ளதைக் கண்டித்தும், முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.


தீர்மானங்கள்:



  1. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைப்பதைக் கண்டித்தும், முடிவை திரும்ப வலியுறுத்தியும் தீர்மானம்.

  2. சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலி யுறுத்தி தீர்மானம்.

  3. தமிழக அரசு கரோனா தடுப்பு பரிசோதனை களைத் தீவிரப்படுத்த வேண்டும் என கோருதல்.


      4 மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.



  1. தமிழகத்தின் மேற்கு மாவட்டங் களின் விவசாய விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படும் பவர் கீரிட் கார்ப்பரேஷன் மூலமாக உயர்மின் அழுத்த (400 Walt) கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கோவை மாவட்ட வழிகாட்டுதல் முறையை இதர மாவட்டங்களுக்கும் வழங்கிட கோரி தீர்மானம்.

  2. தமிழகத்தின் மேற்கு மண்டலத் தில் உள்ள 9 மாவட்டங்களில் அரசின் திட்ட துவக்க நிகழ்ச்கிகள் அவை பற்றிய ஆய்வு கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் குறித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிர திநிதிகளுக்குத் தகவல் அனுப்பாமல் தவிர்ப்பது முறையான செயல் அல்ல. இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மீது Parliament Privilege Committee   இல் புகார் கொடுப்பது.

  3. தமிழக அரசின் திட்டப் பணிகளில் குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நாமக்கல் நாடா ளுமன்ற உறுப்பினரை தகாத முறையில் நடத்தி தாக்கவும் முயற்சித்து அநாகரியமான முறையில் நடந்து கொண்ட ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினரைக கண்டித்து தீர்மானம்.


      8.கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போதிய வருமானம் இல்லாமலும், வேலை இழந்தும் வாடும் வருமான வரி வரம்பிற்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.7500-ம், மாநில அரசு ரூபாய் 5000மும் வழங்கக் கோரி தீர்மானம்.



  1. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்ட தொலைக் காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக-_வைச் சேர்ந்த மாநில நிர்வாகி அநாக ரிகமான முறையில் நடந்த கொண்ட தற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.


சமூக நீதியை நிலை நாட்டுக



  1. மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற் படுத்தப்பட்டோ ருக்கான இடங்கள் ஒதுக்கீடு குறித்த- சமூக நீதியை நிலை நாட்ட வலியுறுத் துவது தொடர் பாக தீர்மானம்.


மருத்துவப் படிப்பில் 'நீட்' தேர்வு முறை நடை முறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து முதுநிலை பாடப் பிரிவிற்கான சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான (OBC) இட ஒதுக்கீடு அகில இந்திய கோட்டாவின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப் படாமலேயே இருக்கிறது.


2017_20-18ஆம் ஆண்டுகளில் பொதுத்  தொகுப் பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர் களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் மண்டல் கமிஷன்' அடிப்படையிலான 27 சதவித ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 இடங்கள் மட்டுமே! 2018-_2019ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற் றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே!


இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்குக் கிடைக்க வேண்டிய 5.530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இட ஒதுக்கீடு கொள்கையைப் புறக் கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


பா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவித இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப் படுவதில்லை என்ற நிலையில், இப் போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது என்ற நிலை உருவாகியுள்ளது.


No comments:

Post a Comment