திருச்சி,ஜூன்11 திருச்சி காட்டூர் பெரியார் பெருந்தொண்டரும், கழகத் தோழருமான ம.சங்கிலிமுத்து, ஜோதி இணையரின் இளைய மகன் ச.மெல்வின் பிரபு, தஞ்சை மாவட்டம், குறுங்குளம் மேற்கு மேட்டுப் பட்டி சிலோன் காலனி தென்மருதை, செல்வராணி இணையரின் மகள் தெ.குண செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன் காணொலி காட்சி மூலம் திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி, பாரதிதாசன் நகரிலுள்ள ஜோதி இல்லத்தில் 3.6.2020 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவில் காட்டூர் ம.சங்கிலிமுத்து வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
அவர் உரையாற்றுகையில்:- அறிவியல் கண்டுபிடிப்பான பல்வேறு சாதனங்களில் வியக்க வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியான கழகத்தின் சார்பில் இந்த அறிவியல் சாத னங்களை பயன்படுத்தி, இயக்கத்தின் சார்பில் பல்வேறு இயக்க பிரச்சாரங்களை இடைவிடாது நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இதுபோன்ற திருமணங்களும் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. காணொலி மூலம் இது நான் நடத்தி வைக்கும் இரண்டாவது திருமண மாகும்.
பெரியார் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற அறிவியல் சாதனங் களின் வளர்ச்சியைப் பற்றி கூறிவிட்டார். அதன்படிதான் இன்று நடைபெற்று வருகின்றன. எனவே, மணமக்கள் அறிவியல் சிந்தனையோடு பகுத்தறிவின் பண்பட்ட வாழ்வை வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும் இவ்விழாவிற்கு மாநில தொழி லாளரணி செயலாளர் மு.சேகர், மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ், ஒன்றியத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தலைமைக்கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, திராவிடர் தொழிலாளர் கழகம் பெல்.ம.ஆறுமுகம் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.
மேலும் இவ்விழாவில் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பின ருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், வி.சிட்டி இந்தியா பிராப்பர்ட்டி பொது மேலாளர் வி.எஸ். ராகவன், வி.சிட்டி இந் தியா பிராப்பர்ட்டி சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன், வி.சிட்டி இந்தியா பிராப்பர்ட்டி அமரதன், மதன் மற்றும் காட்டூர் கிளைக்கழக தலைவர் காமராசு, செயலாளர் ராஜேந் திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பா.லெ.மதிவாணன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், மா.செந்தமிழினியன், காட்டூர் பகுதி தி.மு.க. செயலாளர் நீலமேகம், 60ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ராஜா அர்ஜூனன், சிறீரங்கம் நகரத் தலைவர் கண்ணன், இரா.குணசேகரன், கனகராஜ், சிவானந்தம், பாலசுப்பிரமணியன், ராமச் சந்திரன், சிவக்குமார், விடுதலை கிருஷ்ணன், மகளிர் பாசறை ஒன்றிய செயலாளர் கவுரி விஜய்யோகானந்த், பெரியார் பிஞ்சுகள் யாழ்கண்மணி, யாழிசை, நிலவெழிலன், காவியா உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பெரியார் சமூக காப்பணி பயிற்றுநர் விஜய்யோகானந்த் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment